Daily News

இழுத்து மூடப்படும் நூற்பாலைகள்! அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்குமா? எதிர்பார்ப்பில் ஏங்கித்தவிக்கும் வியாபாரிகள்!

Aug 21 2022 11:57:00 AM

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் முக்கிய தொழில்களில் நூல் தயாரிப்பும் ஒன்றாகும். அந்த மாவட்டத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் அதள பாதாளத்துக்கு சென்ற நூற்பாலைகள் இப்போது தான் மெல்ல மெல்ல மீண்டு வர தொடங்கியுள்ளன. ஆனால் இப்போது வந்திருக்கும் புதிய பிரச்சனை ஒட்டுமொத்தமாக இந்த தொழிலை முடக்கிவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கின்றனர் நூற்பாலை தொழிலாளர்கள்.

cotton price tamilnadu merchants

கேண்டி என்ற அளவுப்படி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி நூற்பாலைகளுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து சில்லறை வியாபாரத்துக்கு பிரித்து அனுப்பப்படுகிறது. ஒரு கேண்டி என்பது 355 கிலோ பருத்தியாகும். சர்வதேச சந்தை நிலவரப்படி ஒரு கேண்டியின் விலை ஒரு லட்சத்தி நான்காயிரம் ரூபாயாக உள்ளது.

cotton price tamilnadu merchants

லட்ச ரூபாய் கொடுத்து பருத்தியை வாங்கி அதை வைத்து நூல் தயாரிக்கும் நூற்பாலைகளுக்கு அதற்கேற்ற வருமானம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. பண நெருக்கடி மற்றும் சரக்கு தேக்கம் காரணமாக பல்வேறு நூற்பாலைகள் மூடப்பட்டு விட்டன. அரசாங்கம் இந்த விஷயத்தில் தலையிடவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக கோவையில் இருக்கும் அனைத்து நூற்பாலைகளும் மூடப்படும் சூழல் கூட உருவாகலாம் என நூற்பாலை உரிமையாளர்கள் புலம்பிக்கொண்டு இருக்கின்றனர்.