notification 20
Misc
அவனுக்கு என்னப்பா லட்சங்களில் சம்பாதிக்கிறான் என்று IT ஊழியர்களை பற்றி நினைப்பவரா நீங்கள்? IT கம்பெனி ஊழியர்கள் மட்டும் லட்சங்களில் சம்பாதிப்பதன் ரகசியம் என்ன?

என்ஜினீயரிங் படித்தவர்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பது என்பது அரிதிலும் அரிது. ஆனால் இந்த IT சம்மந்தமான துறைகளில் படித்தவர்களுக்கு மட்டும் எப்போதும் லட்சங்களில் சம்பளம் பெறுகிறார்கள். அவனுக்கு என்னப்பா உக்காந்தா இடத்துலயே லட்சத்துல சம்பாதிக்கிறான் என்று IT ஊழியர்களைப் பற்றி எல்லோரும் பேசுவதை செவிபட கேட்டிருப்போம்.

முதலில் IT படித்தவர்கள் எல்லோருக்கும் வேலை கிடைப்பதில்லை என்பதை தெளிவாக தெரிந்துகொள்ளுங்கள். அந்த படிப்பிலும் நல்ல மதிப்பெண்கள் பெற்று கேம்பஸ் இன்டெர்வியூவில் தகுதி பெரும் நபர்களுக்கு மட்டும்தான் வேலை கிடைக்கும். சும்மா எடுத்தவுடனே அவங்களுக்கு லட்சங்களில் சம்பளம் தரமாட்டார்கள். எல்லோரும் நம்மைப்போல 10000 முதல் 20000 சம்பளத்துக்கு தான் வேலையில் சேர்வார்கள். மற்ற வேலையில் சேர்ந்து நம்முடைய பெர்பாமன்ஸ் சரி இல்லை என்றால் நம்மை வேலையில் இருந்து உடனே தூக்க மாட்டார்கள்.

ஆனால் IT கம்பெனிகளின் நிலையே வேறு. வெறும் 6 மாசம் தான். சும்மா சீட்டில் உக்காந்து சீட்டை தேய்த்துக்கொண்டு இருக்கிறோம் என்று தெரிந்துவிட்டால் வெளியே போ என்று அடித்து துரத்தி விடுவார்கள். அதேபோல நாம் படித்து முடித்தவுடன் நாம் செய்யும் வேலைக்கும், நாம் படித்த படிப்பிற்கும் அதிக அளவு தொடர்பு இருக்காது.

IT கம்பெனிக்களில் அப்படி கிடையாது. நீங்க 60 வயசு வரை வேலை பார்க்கிறீர்கள் என்றால் அந்த 60 வயது வரை உங்கள் படிப்பை நீங்கள் நியாபகம் வைத்துக்கொண்டே இருக்கவேண்டும். அதேபோல 6 மாதங்களுக்கு அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறை உங்களை நீங்கள் வேலை சம்மந்தமான பல கோர்ஸ்கள் படித்து அப்டேட் செய்துகொண்டே இருக்கவேண்டும்.

எப்போ வேலை போகும் என்றே சொல்ல முடியாது. நீங்கள் உங்களை அப்டேட் செய்யவில்லை என்றால் அடுத்த நிமிடமே கம்பெனிக்கு வெளியில் செல்ல தயாராக இருக்க வேண்டும். ஒரு ப்ராஜெக்ட் முடிந்து அடுத்த ப்ராஜெக்ட் கிடைக்கவில்லை என்றாலும் வேலை பறிபோகும் வாய்ப்புகள் அதிகம்.

இத்தனை பிரச்சனைகளையும் சமாளித்து முன்னோக்கி செல்லும் நபர்களால் மட்டுமே IT துறையில் லட்சங்களில் சம்பாதிக்க முடியும். இல்லைன்னா எல்லாரையும் மாதிரி வெறும் 10000, 15000 சம்பளத்துக்கு தான் நிறைய IT ஊழியர்கள் வேலைக்கு செல்ல வேண்டியிருக்கும்.

Share This Story

Written by

Karthick View All Posts