Daily News

இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்கள், பூஸ்டருக்கு வேறு ஊசி மாற்றிபோடலாமா? மத்திய அரசு கொடுத்த அப்டேட்!

Aug 10 2022 04:35:00 PM

Covishield அல்லது Covaxin தடுப்பூசி செலுத்திக்கொண்ட 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக Corbevax  பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கோவிட்க்கு எதிரான முதன்மை தடுப்பூசிக்கு பயன்படுத்தப்படும் மருந்திலிருந்து வேறுபட்ட பூஸ்டர் டோஸ் அனுமதிக்கப்படுவது இதுவே முதல் முறை.

Corbevax Booster Dose Covishield

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு Covaxin அல்லது Covishield தடுப்பூசிகளின் இரண்டாவது டோஸ் செலுத்திய நாளில் இருந்து, ஆறு மாதங்கள் அல்லது 26 வாரங்களுக்குப் பிறகு, Corbevax தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். Corbevax தற்போது கோவிட்-19 நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் 12 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போட பயன்படுத்தப்படுகிறது.

Corbevax Booster Dose Covishield

நாடு மார்ச் 16 முதல் 12-14 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. நோய்த்தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் பரிந்துரை படி இனி Corbevax  தடுப்பூசியும் போஸ்டர் டோஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.