சினிமாவிலும், சீரியல்களிலும் சின்ன சின்ன ரோல் எடுத்து நடித்தவர் நடிகை காஜல் பசுபதி. சிந்துபாத் சீரியலில் இருந்து எனக்கு நியாபகம் இருக்கிறது. அவ்வப்போது இடையில் சில நிகழ்ச்சிகளில் வந்து போகிறார். வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் நர்ஸ் ரோலில் இவரைப்பார்த்தேன். வெகு நாள் இடைவெளிக்கு பிறகு, 2017ல் பிக்பாஸ் முதல் சீசனில் பங்கேற்றார். அப்போ இருந்து கொஞ்சம் பிரபலமாகிவிட்டார்.
இந்த சீசனில் பிக்பாஸ் டைட்டில் வின்னரான ஆசிம் பற்றி, காஜல் லைட்டா விமர்சித்துள்ளார். ஆசிம் ஆர்மி சும்மா இருப்பாங்களா? உடனே காஜல் பசுபதியின் சோஷியல் மீடியா பக்கங்களில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்தனர். இதனால் தான் உன் புருஷன் உன்ன விட்டுட்டு போயிட்டானா? என்பது மாதிரி எல்லாம் கேவலமா பேசினாங்க.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள காஜல் பசுபதி, அட காப்பி பேஸ்ட் செய்யும் நாய்களா, உன் மக்கள் நாயகன் அசீமை ஏன் அவன் பொண்டாட்டி விட்டு போயிட்டா? என்று கேளுங்கள் என பதிலடி கொடுத்துள்ளார். நீங்க எந்த அளவுக்கு இறங்கி விமர்சனம் செய்வீங்களோ, அந்த அளவுக்கு நானும் இறங்கி பதில் சொல்லுவேன் என்கிற தோரணையில் சொன்ன விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.