notification 20
Daily News
சீட் கொடுக்க டொனேஷன் வாங்கும் காலேஜ் செம்ம அடி! ஐகோர்ட் போட்ட ஒரே ஆர்டரால் அழுது புலம்பும் முதலாளிகள்! அப்படி என்னதான் சொல்லி இருக்காங்க?

கல்லூரிகள் நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதமானது என்றும், அந்த நிறுவனத்தின் வருமானத்தைக் கருத்தில் கொண்டு வசூலித்த நன்கொடைக்கு வரி கட்ட வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பல கல்லூரிகள் அறக்கட்டளைகளை பயன்படுத்தி சீட்  வழங்குவதற்காக நன்கொடை பெறுவதாக புகார் வந்தது. 

ஒரு கல்லூரி 2011-2012 ஆம் ஆண்டில் பெற்றோரிடமிருந்து ரூ.9.90 கோடி நன்கொடை பெற்றதும், அந்த வருமானத்திற்கு வரிவிலக்கு சலுகையாக சுமார் ரூ.4.13 கோடியும் பெற்றுள்ளது  தெரியவந்தது. இந்த பணம் தொண்டு நோக்கத்திற்காக பயன்படுத்தப்படாது. அவற்றுக்கு வரி சலுகை கொடுப்பதை ரத்து செய்வதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

நன்கொடை வசூலிப்பது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்தது. ஐடி சட்டத்தின் 12A பிரிவின் கீழ் அறக்கட்டளைகளுக்கு வழங்கப்பட்ட பதிவுச் சான்றிதழை ரத்து செய்யுமாறு மதிப்பீட்டு ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. தனியார் கல்லூரிகள் நன்கொடை வசூலிப்பது குறித்த தகவலை மாணவர்கள் அல்லது அவர்களது பெற்றோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தை வடிவமைக்குமாறு அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts