இந்தக்காலத்தில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு போனால் தான் குடும்ப செலவை சமாளிக்க முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது. அதுமட்டுமல்லாமல் படித்த பெண்கள் எல்லாம் வீட்டில் சமைப்பது, துணி துவைப்பது என தங்கள் காலத்தை நகர்த்திச்செல்ல விரும்புவதில்லை. வேலைக்கு போகும் விசயத்தில் ஆண்களும் பெண்களை தடுப்பதில்லை. இது குடும்ப செலவுகளை சமாளிக்க உதவியாக இருக்கும் என்றாலும் இதிலும் ஒரு பிரச்சனை இருக்கிறது.
குழந்தை பிறக்கும் வரை எந்த பிரச்சனையும் இல்லை. குழந்தை பிறந்துவிட்டால் பெண்கள் குழந்தைகளை கவனித்துக்கொண்டு வேலைக்கு போவது சற்று சிரமம் தான். குழந்தையை வளர்த்து அதை பள்ளிக்கு அனுப்பும் வரை அந்த தாய்க்கு ஏகப்பட்ட சிரமங்கள் தினந்தோறும் இருந்துகொண்டே இருக்கும். மாமனார், மாமியார் இருந்தால் அவர்களை குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு வேலைக்கு போகலாம். ஆனால் இந்தக்காலத்தில் தான் கல்யாணம் ஆன உடனே கணவனை அழைத்துக்கொண்டு எல்லோரும் தனிக்குடித்தனம் வந்து விடுகின்றனர். அப்புறம் எப்படி மாமியாரை குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்ல முடியும்?
மாமியாருடன் இருந்தால் அவர் வேலைக்கு போவதை நிறுத்திவிட்டு குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு அறிவுறுத்துவார். எனவே அவருடைய உதவியை நாடுவதை விட தன்னுடைய அம்மாவின் உதவியை நாடலாம் என இளம் பெண்கள் பலரும் நினைக்கின்றனர். குழந்தையை பார்த்துக்கொள்ள வேலைக்காரியை வைப்பதற்கு பதிலாக தன்னுடைய அம்மாவை சில காலம் தன்னுடன் தங்க வைத்துக்கொண்டால் நன்றாக இருக்கும் என் நினைத்து அந்த ஐடியாவை சில பெண்கள் செயல்படுத்துகின்றனர்.
இந்த ஐடியா 100 சதவீதம் பலன் அளிக்கும் என்று கூறிவிட முடியாது. உங்களுடைய அம்மா இதற்கு ஒப்புக்கொண்டால் அவர்களுடைய குடும்ப வேலைகள் அனைத்தையும் அவரின் மருமகள் கவனித்துக்கொள்ள வேண்டியிருக்கும். இல்லையென்றால் உங்களுடைய அப்பா, அம்மா இருவரையும் நீங்கள் உங்கள் வீட்டுக்கு கொண்டு வந்து வைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இதைப்பற்றி உங்கள் மாமியார் கேள்விப்பட்டால் பெரிய ச ண்டையே வெ டிக்கும். எங்களுடன் இருக்க விருப்பமில்லாமல் பையனை அழைத்துக்கொண்டு தனிக்குடித்தனம் போய் விட்டு இப்போது உன்னோட குடும்பத்தை கொண்டு வந்து வெச்சிக்கிட்டியே, அவுங்களுக்கெல்லாம் என் பையன் சம்பாரிச்சி போடணுமா என உங்களுடைய மாமியார் கேள்வி கேட்பாங்க.
இன்னொரு பிரச்சனை என்னவென்றால் உங்க குடும்ப விசயங்களில் உங்க அம்மா தலையிட்டால் அதனால் உங்களுடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்படும். நம் குடும்ப விசயத்தில் உங்க அம்மா எதுக்கு தலையிடுறாங்க என உங்கள் கணவனை பார்த்து நீங்க கேள்வி கேட்டுத்தான் அவரை தனிக்குடித்தனம் அழைத்து வந்திருப்பீங்க. இப்போது அதே கேள்வியை உங்க கணவன் உங்ககிட்ட திரும்பக்கேட்டால் என்ன செய்வீங்க?
இந்த பிரச்னையை சமாளிக்க சரியான வழி, குழந்தை பிறந்தவுடன் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை வேலையில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு குழந்தையை பராமரிப்பது தான். உங்களுடைய மாமியார் அல்லது அம்மா இருவரையும் சுழற்சி முறையில் உங்கள் குழந்தையை பார்த்துக்கொள்ள சொல்லலாம். குழந்தை நடக்க ஆரம்பித்தவுடன் நீங்க திரும்ப வேலைக்கு செல்லலாம். இரண்டு பாட்டி வீட்டிலும் குழந்தை நன்றாக பழகிவிட்டால் அதன் பிறகு நீங்க வேலைக்கு செல்லும்போது குழந்தையை பாட்டி வீட்டில் விட்டுவிட்டு தைரியமாக வேலைக்கு செல்லலாம்.