notification 20
Misc
சிக்கன் சாப்பிடும்போது தவறுதலாக எலும்பு வயிற்றுக்குள் சென்றுவிட்டால் என்ன செய்வது?

ஞாயிற்றுக்கிழமை ஆனாலே எல்லார் வீடுகளில் இருந்தும் சிக்கன் குழம்பு வாசம் வருவதை யாராலும் தடுக்க முடியாது. அதுவும் நாட்டுக்கோழியின் விலை அதிகமாக இருப்பதால் நிறைய பேர் பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதை விரும்புகிறார்கள். நாட்டுக்கோழி, ஆட்டுக்கறி சாப்பிடும்போது எலும்பு பெரிய அளவில் இருக்கும். அதனால் அந்த எலும்பு நம் வயிற்றுக்குள் செல்லாது.

நாம் கறியைக் கடிக்கும்போதே அந்த எலும்பு நம் பல்லில் பட்டு வெளியே தூக்கி எறிந்துவிடுவோம். ஆனால் பிராய்லர் கறியில் மிகச்சிறிய அளவில் எலும்புகள் இருக்கும். மிக நுண்ணிய எலும்பை நாம் விழுங்கி விட்டால் அந்த எலும்பு நம் உணவோடு சேர்ந்து உள்ளே சென்று நம் உடலை விட்டு ம*லம் க*ழிக்கும்போது வெளியேறிவிடும்.

அதுவே மிகப்பெரிய அளவில் உள்ள எலும்புகளை நாம் விழுங்கி விட்டால் அவை நம் உணவுக்குழாய், இரைப்பை, தொடைப் பகுதியில் சென்று தங்கிவிடும். அப்போது எ*ரிச்சல், வா*ந்தி, வ*லி, ர*த்த வா*ந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட நிறைய வாய்ப்புகள் உள்ளது. இதுபோன்ற பிரச்சனைகள் சிக்கன் சாப்பிட்டவுடன் ஏற்பட்டால் ம*ருத்துவர்களை அணுகுவது நல்லது.

Share This Story

Written by

Karthick View All Posts