notification 20
Daily News
மாதம் 1 வீட்டில் திருட்டு! திருடிய பணத்தில் ஏழைகளுக்கு உதவுவதே குறிக்கோள்: 10 ஆண்டுகளாக சென்னையில் இப்படி ஒரு மனிதர் இருந்திருக்காரா?

கடந்த 10 ஆண்டுகளாக வீடுகளில் தங்கம் கொள்ளையடித்து, வீடற்ற மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்து வந்தரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் எழும்பூரைச் சேர்ந்த அன்புராஜ் என்பது தெரியவந்தது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஏழைகளுக்கு உதவுவதற்காக மாதம் ஒரு வீட்டில் திருடி வந்தார். வரதராஜன் என்பவர் அளித்த புகாரின் பேரில் அன்புராஜ் கைது செய்யப்பட்டார். வரதராஜன் வீட்டில் இருந்த 8 சவரன் தங்க நகைகள் காணாமல் போன சம்பவத்தில் போலீஸார் சிசிடிவி மூலம் அன்புராஜை அடையாளம் கண்டனர். அவர் கூலி வேலை பார்க்கிறார்.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பெருங்களத்தூரில் 4 வீடுகளில் திருடியதில் அன்புராஜ் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். பெருங்களத்தூர் சென்று தங்கத்தை கொள்ளையடித்துவிட்டு எழும்பூருக்கு  திரும்புவது வழக்கம். திருடிய தங்க ஆபரணங்களை விற்று, அந்த பணத்தை ரயில் நிலையம் அருகே உள்ள ஏழை எளிய மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை வாங்கிக் கொடுப்பதற்காக அன்புராஜ் கடந்த 10 ஆண்டுகளாக செய்து வந்தார். 

ஒவ்வொரு மாதமும் அன்புராஜ் ஒரு வீட்டை மட்டும் தேர்வு செய்து தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை கொள்ளையடித்து செல்வதாக போலீசார் தெரிவித்தனர். ஏழை மக்களுக்கு உதவ விரும்புவதாகவும், அதனால் திருட்டில் ஈடுபட முடிவு செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்தார். நான் ஏழைகளுக்கு உதவ விரும்புகிறேன், கடந்த 10 ஆண்டுகளாக இது எனக்கு திருப்தி அளிக்கிறது என்று அன்புராஜ் காவல்துறையிடம் கூறினார்.

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts