boney-reaction-thunivu-business
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டு மாஸ் நடிகர்களின் படம் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி முதல் ஒருவாரம் வரை வசூலில் ரெண்டு படமும் குறை வைக்கவில்லை. இரண்டு படங்களும் முதல் ஒருவாரம் சமமான வசூலை வாரிக்குவித்தன. ஆனால் முதல் வாரத்துக்கு பிறகு ஸ்டார் நடிகரின் படத்துக்கு மட்டும் குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் படை எடுக்க ஆரம்பித்தனர்.

undefined
அந்த படத்தின் தயாரிப்பாளரும் வாரத்துக்கு ரெண்டு முறை படம் இத்தனை கோடி வசூலித்துள்ளது, அத்தனை கோடி வசூலித்துள்ளது என்று வசூல் நிலவரங்களை அனுதினமும் வெளியிட்டு வந்தார். ஆனால் மாஸ் ஹீரோவின் படம் வெறும் ரசிகர்களை நம்பி மட்டுமே எடுக்கப்பட்டதால் வசூலில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பெரிதாக சோபிக்கவில்லை. எனவே அந்த படத்தை தயாரித்த நிறுவனம் வசூல் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவல்களையும் அதிகம் வெளியிடவில்லை.

undefined
இதனால் கடுப்பான மாஸ் நடிகர் தயாரிப்பாளரிடம் சும்மா ஒரு ட்வீட் போட்டு விடுங்க படம் இவ்வளவு வசூல் பண்ணுச்சு, அவ்வளவு வசூல் பண்ணுச்சுன்னுஎன சொல்லி இருக்கிறார். ஏற்கனவே உங்களை வச்சு எடுத்த ரெண்டு படமும் சரியா போகல, இப்போ உங்களோட வீம்புக்கு அந்த நடிகரோட படத்துடன் நம்ம படத்தை ரிலீஸ் செஞ்ச நாலதான் வசூல் இப்புடி கவுத்துருச்சு. பேசாம போய்டுங்க, என்னால பொய்யான ரிப்போர்ட் எல்லாம் போட முடியாது, ரொம்ப பேசுனா உண்மையான ரிப்போர்ட்டை ரிலீஸ் செய்துவிடுவேன் என மி*ரட்டியுள்ளார் தயாரிப்பாளர். இதனால் அப்செட்டான அந்த மாஸ் நடிகர் தனது அடுத்த படத்துக்கான இயக்குனரை தற்போது தேடி வருகிறார்.
