மேயாத மான் திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமான இந்துஜா அதன் பிறகு பல படங்களில் நடித்தார். ஆனால் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் தான் அவரை பிரபலப்படுத்தியது. அவர் மட்டுமல்ல அந்த படத்தில் நடித்த எல்லாருமே ஓரளவுக்கு பிரபலம் அடைந்துவிட்டனர். இந்துஜா மகாமுனி படத்தில் கூட நன்றாகத்தான் நடித்திருந்தார். ஆனால் விமர்சன ரீதியாக பாராட்டப்பட அந்தப்படம் வசூல் ரீதியாக பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை.
பிகில் படத்துக்கு பிறகு இவருக்கும் பட வாய்ப்புகள் குவியும் என்று எதிர்பார்த்தால் நிலைமை அப்படியே தலைகீழாக மாறிப்போனது. மூக்குத்தி அம்மன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த இந்துஜா அதன் பிறகு விஜய் ஆண்டனி ஜோடியாக காக்கி படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். கொரோனா பிரச்சனை காரணமாக இந்தப்படம் தாமதாகிக்கொண்டே வருவதால் எப்போது வெளியாகும் என்று உறுதியாக தெரியவில்லை.
இதைத்தவிர கையில் இந்துஜாவுக்கு எந்தப்பட வாய்ப்புகளும் இல்லை. இவருடன் பிகில் படத்தில் தென்றல் கதாபாத்திரத்தில் நடித்த அம்ரிதா ஐயர் கூட தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஆனால், இந்துஜாவுக்கு படவாய்ப்புகள் இன்னும் வராமல் உள்ளது கொஞ்சம் ஆச்சர்யம் தான். இருப்பினும் இன்ஸ்டாவில் நேரத்தை செலவிட்டு வரும் இந்துஜா அவ்வப்போது சில கியூட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர் ஒருவர் கண்ணு, தங்கம், ராசாத்தி என்று குழந்தையை கொஞ்சுவது போல வர்ணித்து வருகிறார். இன்னொருவர் என் கனவு தேவதையே என்று கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தாலும் இயக்குனர்கள் பார்வையில் மட்டும் இன்னும் இவர் பிரபலமடையாமலே உள்ளார். வேம்பு கதாபாத்திரம் போல திறமையை வெளிப்படுத்தும் வேறு கதாபாத்திரம் இவருக்கு எப்போது கிடைக்கும் என்பது தான் தெரியவில்லை.