maybemaynot
notification 20
Lushgreen
தந்திர ஆட்டத்தை தொடங்கிய பவானி! நிரூபை பழிவாங்க துடிக்கும் அபிநய் மற்றும் வருண்! ஆட்டத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும்!

பிக் பாஸ் 5-வது சீசனில் தற்போது 6-வது வாரம் நடைபெற்றுக்கொண்டுள்ளது. பிக் பாஸ் வீடு பற்றி எரியும் அளவுக்கு அனைவருக்கும் இடையில் பகை வளர்ந்து கொண்டே சென்றுகொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது நிரூப் மற்றும் பவானி ஆகியோருக்கு இடையில் சண்டை துவங்கியுள்ளது.

சென்ற வாரத்தில் நிரூப் கண்ட்ரோலில் பெட் ரூம் இருந்தது. அப்போது அனைவரையும் பாடாய் படுத்தி எடுத்தார் நிரூப். அதிலும் குறிப்பாக பவானியிடம் சற்று கடுமையாகவே நடந்துகொண்டுள்ளார். அடிக்கடி பவானியை வெளியில் படுக்க சொல்லிவிடுவார். சில சமயங்களில் பச்சைமிளகாய் சாப்பிட வைத்து அழவும் வைத்துவிடுவார். ஒரு முறை இதற்க்கு பவானி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பொது, உன்னிடமும் ஒரு காயின் இருக்கிறது. அதற்கென்று ஒரு வாரம் வரும். அப்போது என்னை பழிவாங்கிக்கொள் என்று நிரூப் தெரிவித்து இருந்தார். தற்போது அதற்கான தக்க சமயம் வந்துள்ளது.

இந்த வாரம் பவானி வாரம் என்பதால் லிவிங் ரூம் பவானியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அதனால் தனது எதிரிகளை பழிவாங்கியே ஆகா வேண்டும் என்பதற்காக முழு வீச்சில் செயல்பட்டு வருகிறார் பவானி. முதல் குறியாக நேற்று நிரூபை வேலை வைத்துள்ளார். ஆனால் நிரூப் பவானி சொல்வதையெல்லாம் செய்ய முடியாது என்று மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த பிரியங்கா நிரூபுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். பின்னர் நிரூப் பவானி சொன்னதை ஏற்றுக்கொள்கிறார்.

மேலும் வருண் மற்றும் அபிநய் ஆகியோர் பவானிக்கு மந்திரிகள் போல செயல்பட்டு வருகிறார்கள். போட்டுக்கொடுத்தல், யாரை பழிவாங்கலாம் என்று ஆலோசனைகளை வழங்குதல் போன்ற வேலைகளை செய்து வருகிறார்கள். கடந்த சில வாரங்களில் பவானி, வருண் மற்றும் அபிநய் ஆகியோருக்கு வாக்குவாதம் வந்தது குறிப்பிடத்தத்க்கது.

Share This Story

Written by

Logeshwaran View All Posts