Lushgreen

பொம்மையால் உருவான பிரளயம்! ஆறாவது வாரத்தில் வெளியானது அக்சராவின் உண்மை முகம்!

Nov 10 2021 07:47:00 AM

பிக் பாஸ் 5-வது சீசனில் தற்போது நடந்து வரும் ஆறாவது வாரம் கலவர பூமியாகவே மாறிவிட்டது என்று சொல்லலாம். இவ்வளவு நாட்களாக ஒருவர் மீது ஒருவர் வைத்து இருந்த கோவம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்பட துவங்கியுள்ளது. இந்தவரிசையில் அக்சராவின் கோவம் தற்போது சிபி மற்றும் நிரூப் மீது திரும்பியுள்ளது.

bigg-boss-5-tamil-aksara bigg-boss-5-tamil-cibi bigg-boss-5-tamil-varun

இந்த வாரத்துக்கான டஸ்கில் தற்போது பொம்மை எடுக்கும் விளையாட்டு கொடுக்கப்பட்டது. இதில் திறமையாக விளையாடும் போட்டியாளர் தப்பித்துக்கொள்ளலாம். வருண் மற்றும் அக்சரா திட்டமிட்டு பொம்மைகளை கடத்தும் வேலைகளை செய்துள்ளனர். அதாவது வருண் பொம்மையை அக்சராவும், அக்சராவின் பொம்மையை வருணும் கடத்தவேண்டும் என்பது தான் திட்டம். வருண் தனது வேலையே வெற்றிகரமாக முடிக்க, அக்சரா நிரூபிடம் மாட்டிக்கொண்டார்.

bigg-boss-5-tamil-aksara bigg-boss-5-tamil-cibi bigg-boss-5-tamil-varun

தன்னை வெளியில் விடுமாறு அக்சரா தெரிவிக்க அப்போது அங்கு வரும் சிபி, நிரூப் செய்ததில் என்ன தவறு என்று கேள்விகேட்கிறார். அதுவரையில் அமைதியாக இருந்த அக்சரா கோவத்தின் உச்சிக்கே சென்று சிபியை அசிங்கமாக திட்டிவிடுகிறார். அது எடிட் செய்யப்பட்டு இருந்தாலும் அவரது வாயசைவுகள் மூலமாக சில வார்த்தைகளை கண்டுபிடிக்க முடிந்தது.

bigg-boss-5-tamil-aksara bigg-boss-5-tamil-cibi bigg-boss-5-tamil-varun

கடந்த வாரங்களில் நீலாம்பரியாக இருந்த அக்சரா சரியாக தான் நடித்தார் என்று இமான் அண்ணாச்சியிடம் சப்போர்ட் செய்த சிபி தற்போது அக்சரா செய்வது தவறு என்ற கோணத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த வாரத்தின் துவக்கத்தில் ஹவுஸ் கேப்டன் போட்டியில் அக்சரா வெற்றிபெற கூடாது என்று அக்சராவின் பானையை உடைத்ததும் சிபி தான். தற்போது பொம்மை விஷயத்திலும் அக்சராவை விமர்சிக்க, அக்சராவின் கோவம் மேலும் அதிகரித்துவிட்டது.

bigg-boss-5-tamil-aksara bigg-boss-5-tamil-cibi bigg-boss-5-tamil-varun

ஆறு வாரங்களுக்கு பிறகு தான் போட்டி சூடுபிடிக்க துவங்கியுள்ளது. காரணம் இந்தவாரம் அனைவரும் எதாவது ஒருவகையில் சண்டையை துவங்கியுள்ளார்கள். எப்போதும் இந்த தந்திரத்தை பவானி தான் கடைபிடிப்பார் ஆனால் இந்த முறை இது அக்சராவில் இருந்து துவங்கியுள்ளது.