notification 20
Highrise
இருக்கா இல்லையா ஏதாவது ஒன்னு தெளிவா சொல்லுங்கடா! இந்த புரியாத புதிருக்கு எப்போது தான் விடை கிடைக்கும்?

உலகெங்கும் பல தீர்க்க முடியாத மர்மங்கள் நிறைந்து காணப்படுகிறது. அந்த மர்மங்களை பற்றி எவ்வளவு தான் ஆராய்ச்சி செய்தாலும் சுலபமாக ஒரு முடிவுக்கு வந்து விட முடியாது. அப்படி தீர்க்க முடியாத மர்மமான விஷயங்களில் ஒன்றாக இருப்பது தான் Bigfoot. வட அமெரிக்க கண்டத்தில் Bigfoot என்ற வினோதமான ஜந்து ஒன்று வாழ்ந்து வருவதாக நீண்ட காலமாக ஒரு நம்பிக்கை இருக்கிறது. இது பார்ப்பதற்கு மிக பிரம்மாண்டமான உருவத்தை கொண்டிருக்கும் என்கிறார்கள். இதனுடைய தோல் முழுவதும் ரோமங்கள் நிறைந்து காணப்படும் என்றும், பார்ப்பதற்கு ஒரு கொரில்லாவை போல இருக்கும் என்றும் கருத்து நிலவி வருகிறது.

Mythical or mysterious -- search for Bigfoot alive among Montana believers  | KECI

அமெரிக்க காடுகளில் இதனுடைய காலடித்தடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இதன் காலடித்தடம் 24 இன்ச் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த விசித்திரமான விலங்கு 6 முதல் 9 அடி உயரம் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இப்படி ஒரு உருவத்தை பார்த்ததாக யாரும் கூறவில்லை. இந்த விலங்கு வாழ்ந்து வருகிறது என்பதற்கு எந்தவிதமான ஆதாரங்களும் இதுவரை கிடைக்கவில்லை. எல்லாமே யூகத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்படும் கருத்துக்களாகவே இருந்து வருகிறது.

Occam's Enigma – Cryptozoology | The Journal of Anomalous Science

இந்த பெரிய காலடித்தடம் காரணமாகவே மக்கள் இதை Bigfoot என்று அழைக்கின்றனர்.ஆனால் பெரிய அளவில் இருக்கும் காலடித்தடங்கள் வளர்ந்த பிரௌன் கரடியின் காலடித்தடமாக கூட இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இப்படி ஒரு ஜந்து இருக்கிறதோ இல்லையோ அது யாருக்குமே தெரியாது. கற்பனை உருவமான இதை வைத்து பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் உருவாக்கப்பட்டு  மக்களிடையே அது பிரபலமடைந்துள்ளது.

Canadian family's viral video of mystery animal noise intrigues Bigfoot  researchers

 

Share This Story

Written by

Logeshwaran View All Posts