பிக் பாஸ் ஐந்தாவது சீசன் தற்போது தொடங்கி விறுவிறுப்பாக சென்று வருகிறது. நிறைய புதுமுகங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து விளையாடி வருகின்றனர். அதில் இளைஞர்களை கவரும் வகையில் பவானி ரெட்டி என்கிற போட்டியாளர் விளையாடி வருகிறார். பிக் பாஸ் வந்த புதிதில் எப்போவும் போல எல்லோரும் தங்களுடைய சொந்த கதை, சோ*க கதையை சொல்லி ரசிகர்களின் ஆதரவை திரட்டி வருகின்றனர்.
பவானி ரெட்டியும் தன்னுடைய பங்கிற்கு தன் சோ*கக்கதையை சொல்லியுள்ளார். இவரின் இளமை காலத்தில் மாடலிங் துறையில் இவருக்கு ரொம்ப ஆர்வம் இருந்ததாம். நிறைய மாடலிங் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடியுள்ளார். உங்களுக்கு நடிப்பு சரியா வரல, நீங்க நடிப்புக்கு செட் ஆக மாட்டிங்க என்று சொல்லி அனுப்பி விட்டனர்.
பின்னர் டான்ஸ் மாஸ்டர் பிரதீப்பை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் பிரதீப்பும், பவானி ரெட்டியும் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தனர். நிறைய முறை பவானி ரெட்டி வ*யிற்றில் கரு உண்டாகியும் தானாகவே கலைந்துள்ளது. ஒரு முறை இவருடைய கூட பிறக்காத அண்ணன் ஒருவர் இவங்க வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர் ம*து போ*தையில் சி*கரெட் பு*கைக்க ஆரம்பித்துள்ளார்.
நீங்க இப்படி சி*கரெட் புகைப்பது தப்பு என்று சொல்லி பவானி ரெட்டி இவரை அனுப்பியுள்ளார். இதை எல்லாம் பார்த்த பிரதீப் உங்களுக்குள் எதோ தவறான உ*றவு இருக்கிறது என்று சொல்லி ரூமிற்குள் சென்று தாழ்பாள் போட்டுள்ளார். சரி இவர் விளையாட்டுக்கு தான் இப்படி பண்ணுகிறார் என்று நினைத்து பவானி ரெட்டி ரூம் கதவை தட்டாமல் வேறு அறைக்கு சென்று தூங்கிவிட்டார்.
மறுநாள் தான் இவருக்கு தெரிந்துள்ளது இவருடைய கணவர் தூ*க்கிட்டு த*ற்கொ*லை செய்துகொண்டார் என்று. போலீஸ்காரங்க இந்த வழக்கை முறையாக விசாரித்து பவானி ரெட்டி மீது எந்த தவறும் இல்லை என்று கண்டுபிடித்துள்ளனர். அந்த கூட பிறக்காத அண்ணன் எங்க வீட்டுக்கு வராமல் இருந்தால் என் கணவர் என்னுடன் இருந்திருப்பார் என்று பாவனை ரெட்டி பிக் பாஸ் நிகழ்ச்சியில் புலம்பி தள்ளிவிட்டார்.