notification 20
Exquisite
TFM எவ்வளவு உள்ள சோப்பை பயன்படுத்த வேண்டும்? தோலுக்கு பாதுகாப்பான சோப்பை எப்படி தேர்ந்தெடுப்பது?

உ டலுக்கு சோப்பு தேய்த்து குளிப்பது நமது கலாச்சாரம் இல்லை. இது அந்நிய நாட்டின் மோகம் என்றே சொல்லலாம். செயற்கை வாசனைகள் பயன்படுத்தும் சோப்புகள், ஷாம்புகள், அத்தர், வாசனை திரவியங்கள் எல்லாமே உ டலுக்கு பல மடங்கு கேடுவிளைவிக்க கூடியது. முடிந்தால் நறுமணம் இல்லாமல், ரசாயனம் கலப்படமில்லாமல் சோப்பை பயன்படுத்துவது நல்லது. உடல் மீது அக்கறை கொண்டவராக இருந்தால், இயற்கையாக கிடைக்கும் மூலிகை பொருட்களை பயன்படுத்தலாம்.

பூலாங்கிழங்கு பொடி, கோரைக்கிழங்கு பொடி, திருநீற்று பச்சிலை பொடி, நலுங்கு மாவு பொடி இவைகளை ஒன்றாக கலந்து குளித்து வாருங்கள் பலன் கிடைக்கும். இல்லை என்றால் பாசி பயறு மாவு அல்லது கடலை மாவு தேய்த்து குளித்து வரலாம். 

மீண்டும் சொல்கிறேன் சோப்பு போட்டு குளிப்பது நமது கலாச்சாரம் இல்லை. சோப்புகள் எதுவும் உடனடியாக விளைவை காட்டாது. மெல்ல மெல்ல தோலை பதம் பார்க்கும். சோப்புகள் உடனடியாக பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதால் அதை யாரும் பெரும் பொருட்டாக எடுத்து கொள்வதில்லை. மாறாக வயதானவுடன் அதுதன் வேலையை காட்டும். சிலருக்கு தோல் புற்றுநோ ய் கூட வரலாம்.

ஆரம்பத்தில் துணிகளை துவைக்கவும் தரையை கழுவவும் பயன்படுத்திய சோப்பை தான் மனிதனும் பயன்படுத்தி வந்தான். ஆனால் இப்போது வித விதமான சோப்புகள் வந்துவிட்டன. ஒவ்வொன்றும் ஒரு விதமாக உள்ளது. சில சோப்புகள் சாதாரணமாகவும் சில சோப்புகள் அதிக வேலைப்பாடுகள் கொண்டும் பளபளப்பான வண்ணங்கள் கொண்டும் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கின்றன. ஆனால் ஒரு சோப்பின் தரம் அதன் வெளித்தோற்றத்தில் இல்லை என உணருங்கள். தரமான சோப்புகள் சாதரணமாக இருந்தாலும் அதையே பயன்படுத்துங்கள். 

குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மென்மையான சோப்புகளை பயப்படுத்துவது நல்லது. கடுமையான சோப்புகள் அவர்களின் தோலில் அ ரிப்பையும் தோலுரிதலையும் உண்டாக்கலாம். இந்த விஷயத்தில் ம ருத்துவரை ஆலோசிப்பது தவறில்லை. தோல் சம்பந்தப்பட்ட ஒ வ்வாமை உள்ளவர்கள் ம ருத்துவரின் ஆலோசனைப்படி, கிளினிக்கல் சோப்புகளை பயன்படுத்துவது விரைவில் ஒ வ்வாமையிலிருந்து விடுதலை அளிக்கும். வடிவத்தை மட்டும் வைத்து அல்லாமல் அதன் TFM அளவை பார்த்தும் சோப்பை தேர்வு செய்ய வேண்டும். விலை குறைவாக உள்ளதே என மோ சமான சோப்புகளை மட்டும் பயன்படுத்தி விடாதீர்கள். இது உடலில் ஒ வ்வாமையை உண்டாக்கலாம். 

தற்போது தோலின்நிறம் வெள்ளையாக மாற ஒயிட்னிங் சோப்புகள் கூட வந்துவிட்டன. ஆனால் உண்மையில் அவை வெள்ளை நிறத்தை கொடுக்கிறதா என தெரியவில்லை. எனவே நீங்கள் வெள்ளை நிறமாக மாற வேண்டும் என்றால் பழங்களை சாப்பிடுங்கள். சோப்பை நாட வேண்டாம். முக்கியமாக அதிக வாசனையை தரும் சோப்புகளை விட மிதமான வாசனை தரும் சோப்புகளை உபயோகியுங்கள். 

ஏதாவது புதிய சோப்பை பயன்படுத்திய பின்னர் ஒ வ்வாமை போன்று எதையாவது உணர்ந்தீர்கள் என்றால் அந்த சோப்பு போடுவதை நிறுத்தி விட வேண்டும். அது உங்களுக்கு சேரவில்லை என்று அர்த்தம். இவ்வாறு சோப்புகளை தேர்வு செய்யும்போது இது சிறந்ததா நமக்கு ஏற்றதா என யோசித்து வாங்க வேண்டும். நிறம், வாசனை, விலை, தோற்றம் இவற்றை விட தரத்தை முதலாய்க்கொண்டு தேர்வு செய்வதே சிறந்தது. முடிந்தவரை இயற்கை பொருட்கள் கொண்டு உடலை சுத்தம் செய்ய முயற்சியுங்கள். இல்லை சோப்பு போட்டு குளித்தால் தான் குளித்தது போல உள்ளதென்றால் TFM 76 க்கு மேல் உள்ள சோப்பாக பார்த்து தேர்வு செய்யுங்கள். 

Share This Story

Written by

AP View All Posts