தமிழ், தெலுங்கு, ஹிந்தி என எந்த மொழி படமாக இருந்தாலும் ஹீரோ, ஹீரோயினுக்காக மட்டும் படம் வெற்றி அடைவதில்லை. படத்தில் கதை இருக்க வேண்டும், காரமான வில்லன் இருக்க வேண்டும், கூடவே க வர்ச்சியான பாடல் இருக்க வேண்டும். இப்படி சில முக்கிய அம்சங்கள் தான் படத்தின் வெற்றியை கூட்டும். இதை விட முக்கியமான ஒன்று இருந்தால் தான் படம் பார்க்க மக்கள் வருவார்கள். 'இந்த நடிகர்கள் எல்லாம் நடித்துள்ளார்கள் என்றால் கண்டிப்பாக படம் நன்றாக தான் இருக்கும் என சொல்வோம் இல்லையா?' அவர்களை தான் supporting character என்போம். அதாவது அவர்கள் இருந்தால் தான் படம் ஓடும் என சொல்ல முடியாது, ஆனால் அவர்கள் இருந்தால் படம் இன்னும் நன்றாக இருக்கும். அப்படி தமிழ் சினிமாவில் உள்ள சிறப்பான குணசித்திர நடிகர்களை தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். கண்டிப்பாக நீங்களும் இந்த கதாபாத்திரங்ளை திரையில் ரசித்திருப்பீர்கள்.
1. முதலில் ரெட்டின் கிங்ஸ்லே, இப்போது சமீபகாலமாக வரும் படங்களில் எல்லாம் இவரது முகம் அடிக்கடி தென்படுகிறது. என்னதான் டாக்டர் படத்தில் நடித்து பிரபலமாகி இருந்தாலும் கூட இவர் முன்னதாக கோலமாவு கோகிலா, A1 போன்ற படங்களின் நடித்த கதாபாத்திரங்கள் தான் தூக்கலாக இருக்கும். என்னதான் ஒருவர் கடின உழைப்பு கொடுத்தால் கூட, நேரம் வரும்போது தான் சுக்ரன் வேலை செய்வான் என்பார்கள் இல்லையா? அப்படித்தான் இவருக்கும். என்னதான் பல படங்களில் முன்னதாக நடித்திருந்தால் கூட, இப்போது டாக்டர் படத்தில் supporting character ஆக நடித்தது தான் இவருக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது. ஏனெனில் டாக்டர் படத்தில் யோகிபாபு காமெடியை விட, சிவகார்த்திகேயன் நடிப்பை விட இவரது காமெடி தான் அடிதூள். இவருக்காகவே படம் பார்க்க செல்கிறார்கள். யாருக்கு தெரியும்? தற்போது supporting character ஆக நடித்துள்ள ரெட்டின் கிங்ஸ்லே கூட எதிர்காலத்தில் லீடிங் காமெடி நடிகராக வலம் வரலாம்.
2. அடுத்து மனோபாலா, மனோ பாலா நடித்துள்ளார் என்றாலே படத்தில் நாசுக்கான காமெடிக்கும் நக்கலுக்கும் பஞ்சம் இருக்காது. சமீபத்தில் அரண்மனை மூன்றாம் பாகத்தில் வேறு நடித்துள்ளார். காமெடிக்கு பஞ்சமே இல்லை. இப்போது தான் காமெடி. பழைய படங்களில் மனோபாலாவை பார்த்ததுண்டா? சென்டிமென்ட் சீன்களிலும் தூள் கிளப்புவார். மனோபாலா காமெடி டிராக்கிற்குள் வர ஆரம்பித்த பிறகு, 'படத்தில் மனோபாலா இருக்கிறார் படம் நல்லா இருக்குமே?' என படம் பார்க்க சென்றவர்கள் தான் அதிகம்.
3. அடுத்து தமிழ் சினிமாவில் முக்கியமான சப்போர்டிங் கேரக்ட்டரை விட்டுவிட்டோமே? சமுத்திரக்கனி. இவர் நடித்திருக்கிறார் என்றால் படம் சமூக கருத்து நிறைந்ததாக இருக்கும், குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற அபிப்ராயம் தோன்ற காரணமானவர். இவர்கள் போன்றவர்களை பார்க்கும்போது தான் புரிகிறது, நடிகர்களுக்கும் சமூகத்தின் மீது அக்கறை இருக்க வேண்டும் என்பது.
4. அடுத்து சொல்லப்போகும் நபர் பெரும்பாலானோர்க்கு பிடித்த நபர். ஆர்ஜே பாலாஜி! ஆரம்பத்தில் சப்போர்டிங் கேரக்ட்டரில் நடித்தவர் போக போக காமெடி நடிகராகி பின்னர் கதாநாயகன் ஆகும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். இளைஞர்களுக்கு மிகவும் பிடித்தமான சப்போர்டிங் கேரக்டர் என்று கூட சொல்லலாம். ஆர்ஜே பாலாஜி வரும் காட்சிகளில், ஹீரோவை கூட காட்ட வேண்டாம். இவரையே இன்னும் கொஞ்ச நேரம் காட்டுங்களேன்? என நினைக்கும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.
5. அடுத்து விஜய் சேதுபதி, என்னது! விஜய் சேதுபதியா? இந்த மனுஷன் ஹீரோவாச்சே? இவரு எங்கப்பா சப்போட்டிங் கேரக்டர்? என நீங்க கேட்க வருவது புரிகிறது. இவரு ஹீரோதாங்க. ஆனால் மனுஷன் இப்போது நடிக்கும் படங்களில் ஹீரோ கதாபாத்திரத்தை காட்டிலும் சப்போர்டிங் கதாபாத்திரம் தான் அதிகம். மக்களும் இவரை அந்த ரோலில் பார்க்க தான் ஆசைப்படுகிறார்கள்.
6. அடுத்து அந்த காலத்து மக்களுக்கும் இந்த காலத்து மக்களுக்கும் பிடித்தமான சப்போர்டிங் கேரக்ட்டர் ராஜ்கிரண் அவர்கள். இவர் நடிக்கும் படங்கள் எல்லாமே நாகரீகமான கதைக்களம் கொண்டதாக தான் இருக்கும். ராஜ்கிரண் நடித்துள்ளார் என்றாலே குடும்பத்தோடு அந்த படத்தை பார்க்க தகுதியான படம் என்று தான் அர்த்தம்.
7. அடுத்து மைனா நந்தினி. சரவணன் மீனாட்சி சின்னத்திரை நாடகத்தை பார்த்திருப்பீர்கள். நாடகத்திலும் சரி படங்களிலும் சரி மைனா நந்தினி. சிறப்பான குணசித்திர நடிகையாக உருவாகி வருகிறார். சரவணன் மீனாட்சி நாடகம் வந்த ஆரம்ப காலத்திலேயே, குணசித்திர நடிகைக்காக மக்கள் ஒரு நாடகத்தை பார்க்கிறார்கள் என்றால் அது மைனா நந்தினிக்காக தான் இருக்கும். மேலே கூறப்பட்ட குணசித்திர நடிகர்கள் எல்லோருமே பல ஆண்டுகளாக சினிமாவில் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட முயன்று கொண்டிருந்தவர்கள். தனக்காக நேரம் வரும்போது அதை சரியாக உபயோகப்படுத்திக்கொண்டு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர்களது பெயரை தான் பட்டிலிட்டுள்ளேன். உங்களுக்கு பிடித்தமான குணசித்திர நடிகர்கள் இருந்தால் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.