notification 20
Timeless
#Marriage hair style: எந்த ஹேர்ஸ்டைல் திருமண ஆல்பத்திற்கு எடுப்பாக இருக்கும் ?

முன்னரெல்லாம் திருமணம் என்றால் மணப்பெண்களுக்கு ஒரே ஹேர் ஸ்டைல் தான் இருக்கும். நீளமான கூந்தலில் பூ அலங்காரம் செய்திருப்பார்கள் அவ்வளவுதான்.இப்போது நடக்கும் திருமணங்களில் வித்தியாசமாக புது புது ஹேர் ஸ்டைலில் தனித்துவமாக தெரிகிறார்கள்...அப்படி பொதுவாக அனைத்து பெண்களும் விரும்பகூடிய தனித்துவமான ஹேர்ஸ்டைல்,

1. Long Braided Hairstyle with flower, பெரும்பாலான தமிழ் கலாச்சார திருமணங்களில் இந்த Hairstyle விரும்ப படுகிறது.பார்ப்பதற்கும் போட்டோவிற்கு இதுவே பொருத்தமாக இருப்பதால் நிறைய மணமகள்கள் இதனை தேர்ந்தெடுக்கின்றனர்.குறிப்பாக முகூர்த்தத்திற்கு இதனையே விரும்புகின்றனர்.

2. simple Braided Hairstyle with flower, இந்த ஹேர் ஸ்டைலுக்கு உங்கள் முடி Braid(பின்னல்)போடும் அளவிற்கு இருந்தாலே போதுமானது.இதற்காக artificial hair தேவையில்லை.பின்னலின் மேல் பூக்களை U அல்லது O ஷேப்பில் வைத்தால் போதும்.simple bridal look எதிர்பார்க்கும் பெண்கள் இதனையே தேர்ந்தெடுக்கின்றனர்.

3. Fishtail Braid Hairstyle,பின்னலில் அதிகப்படியான அலங்காரம் செய்ய விரும்புபவர்கள் இதனை தேர்ந்தெடுக்கின்றனர்.இந்த ஹேர் ஸ்டைலும் simple Braided Hairstyle கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான்.ஒரு சில நுணுக்கங்கள் காரணமாக இரண்டும் வேறுபடுகிறது.

4. Twisted Mermaid Hairstyle, வித்தியாசமாக இதனை ட்ரை செய்யலாம்.பெரும்பாலான திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளில் இந்த ஹேர் ஸ்டைல் அதிகமாக விரும்பப்படுகிறது.

5. Front Puffed Hairstyle, இதில் Puff வைத்து கொண்டு Braid செய்தும் உண்டு , அல்லது free hair style செய்வதும் உண்டு.costume பொருத்து இது வேறுபடுகிறது.

#Marriage hair style: மேற்கண்ட ஹேர் ஸ்டைல்களே பெரும்பாலான திருமணங்களிலும் ரிஸப்ஷன்ங்களிலும் விரும்பப்படுகிறது.

Share This Story

Written by

AP View All Posts