notification 20
Daily News
இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்ற தம்பதி! அது ஒரு தப்புன்னு 3000 அபராதம் போட்ருக்காங்க! அதுக்கப்புறம் என்ன நடந்துச்சு தெரியுமா?

பெங்களூரை சேர்ந்த கணவன்,மனைவி ரெண்டு பேர் கடந்தசில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தங்கள் வீட்டின் அருகில் இருக்கும் சாலையில் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த பக்கம் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர்கள் இருவர் அவர்களை வழிமறித்து இரவு நேரத்தில் இப்படி நடந்து செல்வது தவறு என்று சொல்லி பிரச்சனை செய்துள்ளனர்.

bengaluru-night-time-walk-husband-wife

நாங்கள் இருவரும் கணவன், மனைவி தான் என்ற எல்லா ஆதாரத்தையும் அந்த தம்பதிகள் காட்டியுள்ளனர். இருந்தும் அந்த போலீஸ்காரர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. நைட்ல யாரும் இப்படி தனியா ரோட்டுல நடந்து போகக்கூடாது, நீங்க சட்டத்தை மீறிட்டிங்க, ரெண்டு பேரையும் பாத்தா நல்லா படிச்ச மாதிரி இருக்கீங்க, சட்டம் உங்களுக்கு தெரியாதா என்று சொல்லி திட்டியுள்ளனர்.

bengaluru-night-time-walk-husband-wife

இந்த மாதிரி நைட் நேரத்துல நடந்து வந்ததுக்கு 3000 அபராதம், உடனே கட்டுங்க என்று மிரட்டியுள்ளனர். அந்த பெண் ஒரு கட்டத்தில் அழுதே விட்டாராம். இருந்தும் அந்த போலீஸ்காரர்கள் அவர்களை விடவில்லை. கடைசியாக paytm செயலி மூலம் 1000 ரூபாய் அபராதம் கட்டிவிட்டு அந்த பெண்ணின் கணவர் தனக்கு நடந்த இந்த சம்பவத்தை பற்றி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

bengaluru-night-time-walk-husband-wife

உடனே பெங்களூர் டிஜிபி அனுப் ஷெட்டி எங்கள் பார்வைக்கு இந்த விஷயத்தை கொண்டு வந்ததற்கு நன்றி, சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லி அந்த இரு காவலர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளார். இந்த மாதிரியான நடவடிக்கைகளில் இனி எந்த காவலர்களும் ஈடுபடக்கூடாது என்றும் டிஜிபி அலுவலகத்தில் இருந்து எல்லா காவல் நிலையத்துக்கும் அறிக்கை பறந்துள்ளது.

bengaluru-night-time-walk-husband-wife
Share This Story

Written by

Karthick View All Posts