இயற்கையாகவே ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் இயல்பா முகத்தில் முடி வளரும். பிறப்பில் இருந்து தொடரும் சில செயல்களே, மாற்றங்களுக்கு காரணமாகும். சிறு குழந்தையாக இருக்கும் போதிருந்து, பெண் குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விடும்போது, மஞ்சள் பூசி குளிப்பாட்டி விடும் பழக்கம் காரணமாக தாடி, மீசை வளர்ச்சி தடைபட்டுப்போகும். அதையும் மீறி சில பெண்களுக்கு, முடி வளர்ச்சி இருக்கும். அதற்கெல்லாம் பல்வேறு நாட்டு மருந்தும், நவீன கிரீம்களும் உள்ளன. அவற்றை பயன்படுத்துவதன் காரணமாகவே பெண்களுக்கு தாடி, மீசை வளர்வதில்லை. வளர்ந்தாலும் விரைந்து உதிர்ந்து விடுகிறது.
இது தவிர, ஆண்களுக்கு முகத்திலும், தாடையிலும் உள்ள முடி, ஹார்மோனால் தூண்டப்படுகின்றன. இதனாலேயே ஆண்களுக்கு முகத்தில் முடி முளைக்கிறது. மேலும் பெண்களுக்கு அந்த ஹார்மோன் அளவுகள் குறைவாகவே உள்ளன. அதன் காரணமாகவே அவர்களுக்கு முடி முளைப்பதில்லை. பெண்களில் சிலருக்கும் முகத்தில் மீசை, தாடி லேசாக வருவதை காண்கிறோம். அவர்களுக்கு இந்த ஹார்மோன் சுரப்பு கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். எனக்கு தெரிந்த வரையில் இந்தியாவை தாண்டினால், பிற நாடுகளில் தாடி, மீசைக்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஒரு சில நாடுகள் மட்டும் இதில் விதிவிலக்கு.
ஆப்ரிக்கர்களுக்கோ, சீனர்களுக்கோ முகத்தில் அவ்வளவாக முடி வளர்வதில்லை. இதற்கு காரணம் ஹார்மோன் என்று கூறப்பட்டாலும், அது முழு காரணம் அல்ல. நம்மைப் போலவே மீசை தாடி வளர்க்க நினைப்பவர்கள், மத்திய கிழக்கு நாடுகளை சேர்ந்த அரேபியர்கள் தான். மீசை தாடி வளர்வதற்கு, இனமும் ஒரு காரணியாக கூறபடுகிறது. என் நண்பர் தற்போது வியட்நாமில் உள்ளார். அங்கே உள்ளவர்கள் அவரை பிரம்மிப்பாக பார்க்கிறார்கள். ஏன் என்றால், அங்கே அவருக்கு மட்டும் தான் தாடி, மீசை இருக்காம். நம்முடைய அளவுக்கு அவர்களுக்கு முகத்தில் முடி வருவதில்லை.