கிரெடிட் கார்டு திருட்டு புகார்களை அலட்சியப்படுத்தியதற்காகவும், திருடப்பட்ட தொகைக்கு வட்டி கட்ட வற்புறுத்தியதற்காகவும், அரசு வங்கிக்கு 55,999 ரூபாய் இழப்பீடு வழங்க செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மடிப்பாக்கத்தைச் சேர்ந்த புகார்தாரர் ராமசாமி என்பவர், பாரத ஸ்டேட் வங்கியின் கிரெடிட் கார்டு வைத்திருந்தார்.
ரூ.6,999-ஐ, ஓடிபி (ஒன் டைம் பாஸ்வேர்டு) பயன்படுத்தி மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இதுகுறித்து வங்கியில் புகார் அளித்தபோது, பணத்தை மீட்க உதவாததுடன், திருடப்பட்ட தொகைக்கு வட்டியாக ரூ.14 ஆயிரத்தை தரும்படி கேட்டனர்.அதிர்ச்சியடைந்த ராமசாமி, செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் வங்கி மீது வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திருடப்பட்ட தொகை, அதற்கான வட்டி, மன உளைச்சலுக்குரிய இழப்பீடு, வழக்குக் கட்டணம் உள்ளிட்டவை எல்லாம் சேர்த்து ராமசாமிக்கு ரூ.55,999 வழங்க வங்கிக்கு நீதிபதி உத்தரவிட்டார்.