husband-file-case-against-wife-bangalore
மனிதன் உயிர் வாழ மிக முக்கியமான இன்றியமையாத விஷயங்கள் உண்ண உணவு, உடுத்த உடை, இருக்க இருப்பிடம் தேவை. என்னதான் மனுசங்க கோடி கோடியாக சம்பாதிச்சாலும் எல்லோருக்கும் நினைச்ச மாதிரி தூக்கம் வராது. சிலருக்கு படுக்கையில் படுத்த உடனே தூக்கம் வந்துவிடும். ஆனால் சிலருக்கோ என்ன செஞ்சாலும் தூக்கமே வராது. தூக்கம் என்பது மனிதனின் வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத வரம் என்று தான் சொல்ல வேண்டும். மனிதன் சில நாட்கள் தூங்காமல் தொடர்ந்து இருந்து வந்தால் இறப்பதற்கு கூட சாத்தியங்கள் உள்ளது.

husband-file-case-against-wife-bangalore
தூக்கத்தை பற்றி நம்ம இவ்வளவு பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் பெங்களூரில் தூக்கம் சம்மந்தமான ஒரு வழக்கு காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. பெங்களூரை சேர்ந்தவர் இம்ரான் கான். இவருடைய மனைவி பாத்திமா. இந்த பாத்திமாவுக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்குதாம். தினமும் மாலை 5.30 மணிக்கு தூங்க ஆரம்பித்தால் மீண்டும் இரவு 9.30 மணிக்கு தான் எழுந்திரிப்பாங்களாம்.

husband-file-case-against-wife-bangalore
அதேமாதிரி நைட் 9.30க்கு எழுந்த பிறகு இரவு உணவை சாப்பிட்டுவிட்டு தூங்க ஆரம்பித்தால் அடுத்த நாள் மதியம் 12.30 வரை தூங்குவாராம். இந்த மாதிரி தான் தினமும் பாத்திமா தூங்கி வந்துள்ளார். இதுகுறித்து கணவர் மனைவிக்கு அறிவுரை சொல்லியும் பாத்திமா கேட்டதாக தெரியவில்லை. எனவே இதுகுறித்து பெங்களூரு காவல் நிலையத்தில் மனைவி மீது புகார் கொடுத்துள்ளார் இம்ரான் கான்.
