bala-arun-vijay-vanangaan-movie-update
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளம் வந்தவர் பாலா. கடந்த சில வருடங்களாகவே பாலாவிற்கு நேரம் சரி இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அண்மையில் பாலாவிற்கும் அவருடைய மனைவிக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். பின்னர் பாலா சூர்யாவை வைத்து வணங்கான் என்னும் படத்தை இயக்கி வந்தார்.

bala-arun-vijay-vanangaan-movie-update
படப்பிடிப்பு தளத்தில் சூர்யாவை பாலா ரொம்ப டார்ச்சர் செய்துள்ளார். பாலா கொடுத்த டார்ச்சர் தாங்கமுடியாமல் தன்னுடைய சொந்த படமான வணங்கான் படத்தில் இருந்து விலகிவிட்டார் சூர்யா. தற்போது இந்த வணங்கான் படத்தை நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்கி வருகிறார் பாலா. இந்த படத்தை பாலாவே தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் குறைவான பட்ஜெட்டில் தயாரித்து இயக்கி வருகிறார்.

bala-arun-vijay-vanangaan-movie-update
சூர்யா எந்த காரணத்துக்காக வணங்கான் படத்தை விட்டு விலகினாரோ அதே மாதிரி தான் அருண் விஜய்யையும் டார்ச்சர் செய்கிறாராம் பாலா. படக்குழுவினரிடம் கடுமையாக நடந்து கொள்வது, எல்லோரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டுவது என தொடர்ந்து சில்மிஷம் செய்து வருகிறார் பாலா. ஆனால் இதை அனைத்தையும் கண்டுகொள்ளாமல் தன்னுடைய காட்சிகளை நடித்து கொடுத்துவிட்டு மூச்சு கூட விடாமல் அமைதியாக இருந்து வருகிறார் அருண் விஜய். கன்னியாகுமாரி schedule முடிந்தவுடன் பாலாவிடம் இருந்து எஸ்கேப் ஆகி சென்னை வந்துவிட்டார் அருண் விஜய்.
