நாம் படத்தில் பார்க்கும் விஷயங்களுக்கும், நேரில் பார்க்கும் விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். உதாரணமாக ஒரு நடிகர், நடிகை படத்தில் பார்க்கும்போது ரொம்ப அழகாக காட்சியளிப்பார்கள். ஆனால் நேரில் பார்க்கும்போது சம்பந்தமே இல்லாமல் சாதாரணமாக காட்சியளிப்பார்கள். மக்கள் தான் எல்லாமே நிஜம் என்று நினைத்து அனைத்தையும் தலையில் தூக்கிவைத்து கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பாகுபலி படத்தில் பிரபாஸ் அருவி காட்சி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.
நம்ம எல்லாரும் இந்த இடம் கண்டிப்பாக ஆந்திரா அல்லது கர்நாடகா பகுதியில் தான் இருக்கும் என்று நினைத்திருப்போம். ஆனால் உண்மையில் இந்த இடம் உள்ள பகுதி கேரளா மாநிலத்தில் அமைந்துள்ளது. அத்திரப்பள்ளி அருவியில் தான் இந்த அருவி சம்மந்தமான காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். படத்தில் இந்த அருவி மிகவும் உயரமானதாக காட்டப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த அருவி 80 அடி நீளம் உயரம் மட்டுமே கொண்டது. படத்தில் கிழே இருந்து மேலே யாரும் செல்லமுடியாது என்பதை நிரூபிக்கவே ரொம்ப உயரமாக காட்டி இருப்பார்கள். ஒரு காலத்தில் இந்த பகுதி காதலர்கள் த ற் கொ லை செய்துகொள்ளும் சூ சை ட் பாயிண்ட் ஆகவே இருந்து வந்தது. ஆனால் எப்போது இந்த அருவி சினிமா காரர்கள் கண்ணில் பட்டதோ அன்று முதலே டூரிஸ்ட் பகுதியாக மாறிவிட்டது. புன்னகை மன்னன், முதல்வன், குரு, பாகுபலி போன்ற படங்களை இங்கே எடுத்து இப்போது இந்த பகுதி உலக பேமஸ் ஆகிவிட்டது.