notification 20
Misc
#PowerCut: நம்ம ஊரில் கரண்ட் கட் ஆவது மாதிரி வெளிநாட்டில் ஆவதில்லையே எப்படி? சத்தமில்லாமல் முடிக்கப்படும் சோலி!

இங்கு மாதத்திற்கு ஒருமுறை வெள்ளிக்கிழமையோ அல்லது சனிக்கிழமையோ காலை 9 மணிக்கு கரண்ட் போனால், வருவதற்கு மாலை 7 மணியாகிவிடும். ஈ.பி ஆபீசுக்கு போன் போட்டு கேட்டால், மாலை 5 மணிக்கு வந்துவிடும் என்று சொல்வார்கள். அதெல்லாம் தண்ணீரில் எழுதிய எழுத்துக்களைப்போல நினைத்துக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் 8 மணி வரைக்கெல்லாம் கரண்ட்டை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டி இருக்கும். நம்ம ஊரு பவர் கட், இன்னும் இந்த நிலையில் தான் இருக்கு.

கேட்டால் மெயின்டனென்ஸ் என்று சொல்வார்கள். அந்த நாளில் மின்கம்பியில் உரசிக்கொண்டிருக்கும் மரங்களை வெட்டுவது, கம்பங்களை மாற்றுவது இந்த மாதிரி வேலை தான் நடக்கும். அதற்கே மாலை ஆறு மணிக்கு மேலாகிவிடுமாம். நம்ம ஊரில் இப்படி என்றால், சமீபத்தில் மலேசியாவில் இருந்து வந்த என் நண்பன், அங்கெல்லாம் கரண்ட் கட்டே ஆவதில்லை மச்சி என்கிறான். அங்கேயும், மெயின்டனென்ஸ் வேலை எல்லாம் நடக்குமாம். இருந்தாலும் எப்படி கரண்ட் கட் ஆவதில்லை என்று கேட்டேன்.

அங்கு ஒவ்வொரு இடத்திலும் குடியிருப்பு பகுதி, வணிகம் மற்றும் மருத்துவமனை என்று தனித்தனியாக மின் விநியோகம் பிரிக்கப்பட்டிருக்குமாம். தொழிற்சாலைகள் வாடகை முறையில் ஜெனரேட்டர் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த ஜெனரேட்டர்கள் எல்லாம் டீசல் இயந்திரத்தில் இயக்கப்படுபவை. அங்கு மெயின்டனென்ஸ் வேலைகளுக்கு முன்பாக பேக்-அப் ஜெனரேட்டர் பொருத்தப்படும். சரக்கு கப்பல்களில் பயன்படுத்தபடும் கண்டெய்னர் வடிவில் ஜெனரேட்டர்கள் இருக்கும்.

லாரிகளில் ஏற்றி பழுது பார்க்கும் இடங்களுக்கு அனுப்பபடும். மின்சார இணைப்பை துண்டிக்காமல் ஜெனரேட்டர் இணைக்கப்பட்டு, பராமரிப்பு பணிகள் தொடங்கும். வேலை முடிந்தவுடன் ஜெனரேட்டர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மின் நிலைய மின்சாரத்துடன் இணைக்கப்படும். மக்களுக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே எல்லா வேலைகளும் முடிந்துவிடும். ஆனால், இங்கு நாளைய மின்தடை பகுதிகள் என்று நியூஸ் பேப்பரில் வரும் அறிவிப்பை பார்த்துவிட்டு, தண்ணீர் தொட்டி நிரப்பி வைத்து, குறிப்பிட்ட நேரத்துக்குள் சமைத்து விட்டு மின்தடையை எதிர்நோக்கி வீட்டில் இருக்கிறோம். நம்ம டிசைனில் அப்படி இருக்கு மக்களே! 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts