notification 20
Misc
குழந்தைங்க கையில் மொபைல் போனை கொடுக்காதீங்க என்று சொன்னால் யார் கேக்குறாங்க! அம்மா குளிப்பதை இன்ஸ்டாகிராம் லைவில் வெளியிட்ட குழந்தை!

சின்ன குழந்தைங்க கையில் மொபைல் போனை கொடுத்து கெடுக்க வேண்டாம் என்று நம்ம சொன்னா யாரும் கேக்க மாட்டாங்க. உலகமே இந்த மொபைல் போனில் தான் இயங்குது, குழந்தைங்க உபயோகப்படுத்துனா என்ன என்கிற மாதிரி எல்லோரும் பேச ஆரம்பித்துவிடுவார்கள். அமெரிக்காவில் ஒரு பெண் தன் குழந்தையிடம் வீடியோ பார்ப்பதற்காக மொபைல் போன் கொடுத்துள்ளார்.

குழந்தைகள் பார்க்கும் பொம்மை சேனல் வைத்து மொபைல் கொடுத்துவிட்டு குளிப்பதற்காக அந்த பெண் பாத்ரூம் சென்றுள்ளார். சில மணி துளிகள் குழந்தை வீடியோ பார்த்தவுடன் எதேச்சையாக எதோ பட்டனை அழுத்தி வீடியோ நின்றுவிட்டது. ஏன் வீடியோ நின்றுவிட்டது என்று கேட்க குழந்தை அம்மா இருந்த பாத்ரூமுக்கு சென்றுள்ளது. அந்த பெண்ணும் நம்ம குழந்தை தான் உள்ளே வருது என்று நினைத்து குழந்தையை உள்ளே அழைத்துள்ளார்.

அப்போதான் தெரிந்துள்ளது குழந்தையின் கை தெரியாமல் பட்டு இன்ஸ்டாகிராம் லைவ்வுக்கு சென்றுவிட்டது. அந்த பெண் சில மணி துளிகள் சங்கடத்தில் துடித்து போய்விட்டார். அந்த பெண்ணே அண்மையில் சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இந்த மாதிரி யாரும் குழந்தைக்கு போன் கொடுக்காதீங்க என்று தெரிவித்துள்ளார்.

இந்த விடியோவை பார்த்த நிறைய பெண்கள் நாங்களும் இதே மாதிரியான சங்கடத்தை அனுபவித்துள்ளோம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். இனியாவது குழந்தைகளுக்கு மொபைல் போன் கொடுப்பதை தவிர்ப்பது ரொம்ப நல்லது. முடிந்தவரை குழந்தைகளிடம் மொபைல் போன் கொடுக்கும்போது கிட்ஸ் மோடில் வைத்து கொடுப்பது ரொம்ப நல்லது.

Share This Story

Written by

Karthick View All Posts