notification 20
Misc
ஏம்ப்பா? உனக்கெல்லாம் ஃபீலிங்ஸ் இருக்கா? இல்லையா? புருஷன மடக்க பொண்டாட்டி, எவ்ளோ ரிஸ்க் எடுத்து என்ன யூஸ்? அங்க பல்பே எரியலையே?

ஆண்கள் மட்டும் தான் அந்த மாதிரி பேச வேண்டுமா? பெண்கள் கொஞ்சம் ஹா ட்டாக பேசினால் தவறா?  ஒருசில பெண்கள், தங்களது பெண்கள் கேங்கிற்குள் அந்த மாதிரி பேசுவதை ஒட்டு கேட்ட அனுபவம் உண்டா?  நாகரீகமாக அதேநேரம் வெளிப்படையாக அவர்கள் பேசுவதை கேட்கும் போது அழகாக இருக்கும். ரசிக்கும்படி மட்டுமே இருக்கும், கண்டபடி எல்லாம் இருக்காது. 

ஆனால் ஆண்கள் அப்படி பேசுவதை விட பெண்கள் அந்த மாதிரி பேசும் போதுதான் ரசிக்கும்படி இருக்கும். ஆனால் எங்க? நம்ம சொ சைட்டி தான் பெண்கள் வெளிப்படையாக பேச அனுமதிப்பது இல்லையே. பெண்கள் என்றாலே அடக்கமாக மட்டுமே இருக்க வேண்டும். பெண்களுக்கும் எல்லா உ ணர்வுகளும் உண்டு என்பதை, எப்போது இந்த உலகம் புரிந்துகொள்ள போகிறதோ? சரி, படங்களில் ஆவது பெண்கள் அப்படி பேசுவதை ஒரு இயக்குனராவது வெளிப்படுத்துவாரா என்பதை ரொம்ப நாளாக எதிர்பார்க்கிறேன். ஏனெனில் பெரிய பெரிய மாற்றம் நிகழ்வது எல்லாம் திரைதுறையால் மட்டும் தான் சாத்தியம்.

இன்று அது சாத்தியமாகிவிட்டது. இன்ஸ்ட்டா, பேஸ்புக், வாட்ஸ்ஆப் என எங்கு பார்த்தாலும் நண்பர்கள் எல்லோரும் ஒரு வெப் சீரியஸ் பற்றி ஓயாமல் பேசிக்கொண்டிருந்தார்கள். வாரம் ஒரு வெப் சீரியஸ் ரிலீஸ் ஆகி கொண்டிருக்கிறது. இதுவும் பத்தோடு பதினொன்று தான் என கடந்து சென்றுவிட்டேன். நண்பர் ஒருவர் இந்த வெப் சீரியஸ் பார்க்குமாறு லின்க்கை அனுப்பினார். பொழுது போகவில்லை என அந்த வெப் சீரியஸ் பார்க்க தொடங்கினேன்.

அழகான புதுமண தம்பதிகள், மனைவியை ரசிக்காமல், கணவர் எப்போது பார்த்தாலும் வேலையை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறார். என்ன செய்தால் கணவர் தன்னை கண்டுகொள்வார்? என்பதை தெரிந்துகொள்ள அனுபவமுள்ள தோழியிடம் ஐடியா கேட்கிறார் புதுப்பொண்ணு. அதில் தோழிகள் இருவரும் ஒப்பனாக பேசுவது எல்லாம் வேற லெவல். மனைவி எடுக்கும் எல்லா முயற்சியையும் புருஷன் உடைத்து போவதை பார்க்கும் போது, ஆடியன்ஸே ஒரு நிமிடம் ஏம்ப்பா? உனக்கெல்லாம் ஃபீலி ங்ஸ் இருக்கா? இல்லையா? என நினைத்திருப்பார்கள்.

இறுதியாக அந்த பொண்ணு அந்த பையன உஷார் பண்ணுச்சா இல்லையா? உஷார் பண்ண அந்த பொண்ணு யூஸ் பண்ண கிளுகிளுப்பான டெக்னீக் தாங்க, முதல் எபிசோட். நீங்களும் பாருங்க, இருவரும் ஓப்பனாக பேசும் டயலாக் எல்லாம் வேற லெவல். 

Share This Story

Written by

AP View All Posts