maybemaynot
notification 20
Daily News
அட்லீ எடுத்த முடிவால் லியோ படத்துக்கு ஆபத்து? அண்ணனை அசிங்கப்படுத்த போகிறாரா அட்லீ?

atlee-lokesh-movie-clash-october-month-2023

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வளம் வருபவர் நடிகர் விஜய். தற்போது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் பிரம்மாண்ட படத்தில் நடித்து வருகிறார். லியோ படம் அக்டோபர் மாதம் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

atlee-lokesh-movie-clash-october-month-2023

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லீ. இவர் நடிகர் விஜய்யின் உடன் பிறக்காத சகோதரர் என்றே சொல்லலாம். தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து மூன்று சூப்பர் ஹிட் படங்களை விஜய்யை வைத்து இயக்கினார். தற்போது பாலிவுட் சினிமாவின் பாட்ஷா ஷாருக்கானை வைத்து ஜவான் என்னும் படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா போன்ற தென்னிந்திய நடிகர்கள் இந்த ஜவான் படத்தில் நடித்து வருகின்றனர்.

atlee-lokesh-movie-clash-october-month-2023

அட்லீ எந்த மேடை ஏறினாலும் என்னுடைய அண்ணன் விஜய் என்று மார் தட்டி சொல்வார். எந்த ஒரு இடத்திலும் விஜய்யை விட்டுக்கொடுக்காமல் பேசுவார். இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் உருவாகும் ஜவான் படமும் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ படமும் ஒரே தேதியில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. அண்ணன், அண்ணன்னு சொல்லிட்டு இப்படி அண்ணன் படத்துக் கூடவே ஜவான் படத்தை விடுறியே என சினிமா வட்டாரங்களில் அட்லீ குறித்து பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts