notification 20
Daily News
இதுவரை எந்த நாடும் நிகழ்த்தாத சாதனையை நிகழ்த்திய ஆசிய நாடுகள்! FIFA உலகக்கோப்பை போட்டிகளில் இதுஒரு மைல் கல் என்று தான் சொல்லணும்!

கால்பந்தாட்டம் என்றால் அது ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டுமே சொந்தமான ஒரு விளையாட்டு என்பதை போன்ற பிம்பம் ஆரம்பம் முதலே உலகம் முழுவதும் பரவி வந்தது. அதை உறுதி செய்யும் வகையிலேயே நம் இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் முன்னிறுத்தப்பட்டு கால்பந்தாட்டம் பெரும்பாலான மக்களால் விளையாடப்படவில்லை.

asia-team-qualified-for-next-stages-fifa-world-cup

தற்போது நடக்கும் FIFA 2022 உலகக்கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளில் கூட இந்தியா விளையாடவில்லை என்று சொல்வதை விட அந்த போட்டிக்கே தகுதி பெறவில்லை என்று தான் சொல்லவேண்டும். நம் மக்களும் அதிகம் கால்பந்தாட்ட போட்டிகளை அதிகம் ரசித்து பார்க்க மாட்டார்கள். ஆசியாவை சேர்ந்த இரண்டு அணிகள் பலம் வாய்ந்த ஐரோப்பிய அணிகளை பின்னுக்கு தள்ளி உலகக்கோப்பை போட்டியில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

asia-team-qualified-for-next-stages-fifa-world-cup

ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் பலம் வாய்ந்த ஐரோப்பிய நாடுகளுடன் விளையாடி கால்பந்தாட்ட உலகக்கோப்பையில் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய சாதனையாகத்தான் பார்க்கப்படுகிறது. ஜப்பான் அணி தன்னுடன் மோதிய பலம் வாய்ந்த அணிகளான ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளை 2-1 என்கிற கோல் கணக்கில் வென்றது. அதேபோல தென் கொரியா அணி தன்னுடன் மோதிய போர்ச்சுக்கல் அணியை 2-1 கோல் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

asia-team-qualified-for-next-stages-fifa-world-cup
Share This Story

Written by

Karthick View All Posts