notification 20
Daily News
லியோ படம் பற்றிய சஸ்பென்ஸை உடைத்த அர்ஜுன்! ரசிகர்கள் செம்ம ஹேப்பி அண்ணாச்சி!

arjun-talk-about-lokesh-movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் லியோ படம் தயாராகி வருகிறது. தற்போது லியோ படத்திற்கான படப்பிடிப்புகள் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. த்ரிஷா, அர்ஜுன், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத் போன்ற முன்னணி பிரபலங்கள் லியோ படத்தில் கமிட் ஆகி நடித்து வருகின்றனர்.

arjun-talk-about-lokesh-movie

லியோ படத்தை பற்றிய சஸ்பென்ஸ் ஒன்றை அண்மையில் பேட்டி ஒன்றில் அர்ஜுன் உடைத்துள்ளார். லோகேஷ் கனகராஜின் கைதி மற்றும் விக்ரம் போன்ற படங்களை பார்த்திருக்கிறேன். லோகேஷ் படம்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். மற்ற இயக்குனர்களை விட வித்யாசமான படங்களை லோகேஷ் இயக்குவார். லோகேஷ் படத்தில் நடிப்பதில் ரொம்ப மகிழ்ச்சி. லியோ படத்தில் லோகேஷ் என்னை ஒரு வித்யாசமான கதாப்பாத்திரத்தில் காட்டப்போகிறார். இதுவரை பார்க்காத ஒரு அர்ஜுனை நீங்க இந்த படத்தில் பாப்பீங்க. இந்த படத்தின் மீது எனக்கு அளவு கடந்த நம்பிக்கை இருக்கு என்று பேட்டி கொடுத்துள்ளார் அர்ஜுன்.

Share This Story

Written by

Karthick View All Posts