notification 20
Daily News
என்னது பிகில் படம் பிளாப்பா? தயாரிப்பாளரே சொல்லிட்டாங்க! விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்திய கல்பாத்தி அர்ச்சனாவின் அண்மை பேட்டி!

kalpathi-archana-talk-about-vijay-bigil-collection

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் வளம் வருபவர் நடிகர் விஜய். அண்மையில் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் 300 கோடிக்கும் மேல் வசூலித்து வசூல் வேட்டை ஆடியது. தற்போது நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்னும் பிரம்மாண்ட பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார்.

kalpathi-archana-talk-about-vijay-bigil-collection

விஜய் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தெறி, மெர்சல், பிகில் என தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். அதுவும் பிகில் படம் எல்லாம் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது என்று விஜய் ரசிகர்களும், திரைத்துறையை சேர்ந்தவர்களும் கருத்துக்களை வெளியிட்டனர். ஆனால் பிகில் படம் வெளியானபோது வருமானவரி துறை அதிகாரிகள் பிகில் படத்தை தயாரித்த கல்பாத்தி குழுமத்தினரின் அலுவலகத்தில் சோதனை நடத்தி நிறைய குடைச்சல்களை கொடுத்தனர்.

kalpathi-archana-talk-about-vijay-bigil-collection

இதுகுறித்து அண்மையில் பேட்டி கொடுத்த கல்பாத்தி அர்ச்சனா எங்களுக்கு லவ் டுடே படம் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது. லவ் டுடே படத்துக்கு முன்னாடி நாங்க தயாரிச்ச படத்தால் ஏற்பட்ட நஷ்டத்தை எல்லாம் லவ் டுடே படம் எங்களுக்கு ஈடுகட்டி கொடுத்துருக்கு. லவ் டுடே எங்களுக்கு மிகப்பெரிய லாபத்தை கொடுத்துச்சு என்று பேட்டி கொடுத்துள்ளார் அர்ச்சனா. இதன் மூலம் பிகில் படம் கல்பாத்தி குழுமத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்திருக்கும் என சினிமா வட்டாரங்களில் பேச ஆரம்பித்துவிட்டனர்.

Share This Story

Written by

Karthick View All Posts