ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து கீழே தூக்கிப் போட்டால் கண்டிப்பாக அது உடைந்துவிடும். அல்லது அந்த பொருளோ, உ யிரினமோ அதற்கு அடிபடும். இதுதான் இயற்கையின் நியதி. ஆனால் எறும்புகளுக்கு மட்டும் ஒரு வித்யாசமான பழக்கம் உள்ளது.
எந்த அளவு உயரத்தில் இருந்து எறும்புகள் கீழே விழுந்தாலும் அவற்றுக்கு ஒன்றும் ஆவதில்லை. அது பாட்டுக்கு ஹாயாக மீண்டும் தன் பாதியில் நடந்து செல்லும். இதற்கு என்ன காரணம் தெரியுமா? ஒரு பொருள் ஒரு குறிப்பிட்ட உயரத்தில் இருந்து கீழே விழும்போது அது உடைவதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு எடை இருக்க வேண்டும்.
எறும்புகளின் உடல் எடை அந்த குறிப்பிட்ட அளவை விட மிக மிகக் குறைவு. அதனால் தான் எறும்புகள் எவ்வளவு உயரத்தில் இருந்து விழுந்தாலும் அதற்கு ஒன்றும் ஆவதில்லை. நம்ம நினைப்பதைப்போல எறும்புகள் மேலே இருந்து கீழே விழுவதில்லை, காற்றின் உதவியுடன் சுலபமாக தரை இறங்குகின்றன.