மனிதன் பரிணாம வளர்ச்சி அடையாமல் குரங்குகளாக இருந்தவரை பின்புறமாக தான் இணை சேர்ந்ததாக டெஸ்மொன்ட் மாரிஸ் என்ற ஆராய்ச்சியாளர் புதிதாக ஒரு கூற்றை முன்வைத்துள்ளார். இன்றும் விலங்குகளை பொறுத்தவரையில், பின்புறத்தை பார்ப்பதுதான் கவர்ச்சியாகும். நமக்கு பரிட்சையமான விலங்குகளை எடுத்துக்கொள்ளுங்கள். நாய், பூனை, மாடு, குதிரை இவை எல்லாமே பின்புறம் பார்த்து இனக்கவர்ச்சி கொண்டு உடலுறவு கொள்ளும். அதனால் அவை பின்புறத்தை அழகாக வைத்துக் கொண்டு, தன்னுடைய இணையை இனக் கவர்ச்சிக்கு அழைக்கும்.
காலப்போக்கில் மனிதன் மட்டும் இரண்டு கால்களுடன் நடக்க ஆரம்பித்த பொழுது, அவனுடைய இணை சேரும் ஸ்டைலும் மாறிப்போனது. மனித இனம் மட்டும் தான், முன்புறம் உறவுகொள்ள ஆரம்பித்தது. பிறகு முன்புறத்தை பார்த்து தனக்கு இணையான ஜோடியை தேர்வு செய்யும் வழக்கம் ஆரம்பித்தது. இந்த பரிணாம வளர்ச்சியின் காரணமாக, பின்புறம் எந்த அளவுக்கு பெரிதாக கவர்ச்சி உறுப்பாக இருந்ததோ, அதே போல பெண்களின் மார்பகங்கள் பெரிதாகி, கவர்ச்சி உறுப்பாக மாறின. தனக்கு தகுந்த ஆண் துணையை கவர்ந்திழுக்க மார்பகங்கள் அடைந்த மாற்றம் இது.
பெண்களுக்கு பின்புறம் கவர்ச்சியான பகுதியாக இருந்தாலும், இப்போதைக்கு முன்புற மார்பகத்தைப் பார்த்து தகுந்த துணையை தேர்ந்தெடுக்கும் வழக்கமும் உள்ளது. பெண்களுக்கு முன்னும் பின்னும் அழகாக இருக்கக் காரணம் கூட இனக்கவர்ச்சியால் மட்டுமேயாகும். மார்பகம் குழந்தைக்கு பாலூட்டும் உறுப்பு என்பது இரண்டாம் பட்சம் தான். அது பிற்காலத்தில் ஏற்பட்ட நாகரீக கருத்தியல். விஞ்ஞான ரீதியாக மார்பகம் இணையை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி உறுப்பாகும். மனித குரங்குகள் இன்னும் பழைய முறைப்படி பின்புறமே இணை சேர்வதால், அவற்றின் மார்பகங்கள் தட்டையாக இருக்கும்.
இதுவரை நான் சொன்னதை கட்டுக்கதையாக நினைக்க வேண்டாம். நிதர்சன உண்மை இதுதான். குரங்குகள் பரிணாம வளர்ச்சி அடையாமல் பழைய படியே இருப்பதால், அவற்றின் பாலூட்டும் மார்பகங்கள் தட்டையாக உள்ளது. மனிதன் முன்புறத்துக்கு மாறிவிட்டதால், இனக்கவர்ச்சிக்காக பருத்த மார்பகத்தை மனித இனம் ஏற்படுத்திக் கொண்டது. ஆகவே மார்பகத்தை பார்த்து இனக்கவர்ச்சி ஏற்படுவது இயற்கையின் விதி. குழந்தைக்கு பால் கொடுக்கும் இடத்தை மார்பகம் ஆக மாற்றியது மனிதனின் பரிணாம வளர்ச்சிதான்.