notification 20
Daily News
இனி "வாரிசு" வந்தால் தான் நிஜம்: ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆளில்லா விமானம்? 5 யானைகள் வந்தது எப்படி? எல்லாமே விஜய் கை மீறிப் போயாச்சு!

முன் அனுமதியின்றி படப்பிடிப்பின் போது ஐந்து யானைகளைப் பயன்படுத்தியதாக வரிசு படக்குழுவினருக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 7 நாட்களுக்குள் விரிவான விளக்கத்தை சமர்ப்பிக்குமாறு தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. ஏற்கனவே படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடிக்கிறது. இப்போது புதிதாக ஒரு தலைவலி உருவெடுத்துள்ளது. இதற்கெல்லாம் காரணம் ஒரு செய்தி சேனல் தான் என்கின்றனர் படக்குழுவினர்.

அனுமதியின்றி படப்பிடிப்பிற்கு விலங்குகள் பயன்படுத்தப்படுவதாக செய்தி சேனலுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அவர்கள் ஈவிபி பிலிம் சிட்டிக்கு வந்தனர். நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த சரவணனும் சம்பவ இடத்தில் இருந்தார். அப்போது பறக்கும் ஆளில்லா விமானமான டிரோன்களை பறக்கவிட்டு அந்த இடத்தை கண்காணித்தனர். படப்பிடிப்பின் போது அத்துமீறி நுழைந்து ட்ரோன்களைப் பயன்படுத்தியதாக செய்தி சேனல் மீது படத் தயாரிப்புக் குழுவினர் புகார் கொடுத்தனர். 

பதிலுக்கு விலங்குகளை வைத்து படம் எடுப்பதாக சேனல் நிர்வாகம் ஆதாரங்களை கொடுத்தது. செய்தி சேனல் நிர்வாகத்தின் மீது போலீஸ் புகார் கொடுக்க போய், அதுவே படக்குழுவினருக்கு சிக்கலாக மாறிவிட்டது. அரசியல் தலைமைகளை பகைத்துக்கொண்டால், எவ்வளோ பெரிய சினிமா பிரபலமாக இருந்தாலும் என்ன ஆகும் என்பதற்கு, வாரிசு படம் ஒரு எடுத்துக்காட்டு. 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts