Lushgreen

உடம்பை ரப்பர் மாதிரி வளைத்து யோகாசனம் செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன? உங்களுக்கு பிடித்தமான யோகா டீச்சராக இவரை வைத்துக்கொள்வோமா?

Jun 12 2021 06:59:00 PM

சினிமாவில் பின்னணி பாடகியாக இருந்த ஆண்ட்ரியா அதன் பிறகு நடிகையாகவும் மாறினார். மிகவும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து முத்திரை பதிப்பவர். பின்னணி பாடகி மட்டுமல்லாமல் பல ஹீரோயின்களுக்கும் டப்பிங் பேசியிருக்கிறார். பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, என்றென்றும் புன்னகை, இது நம்ம ஆளு, தரமணி, துப்பறிவாளன், வடசென்னை என்று ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வித்தியாசத்தை காட்டி வருகிறார்.

hard-yoga andriya-jeremiah

தரமணி படத்திற்காக சிறந்த நடிகை விருதை வாங்கியவர் துப்பறிவாளன் மற்றும் வடசென்னை படங்களிலும் மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பூஜை படத்தில் அயிட்டம் பாடலுக்கு குத்தாட்டம் போட்டவர் அவள் படத்தில் படம் முழுவதும் முத்தக்காட்சிகள் மற்றும் நாயகன் சித்தார்த்துடன் அளவு கடந்த நெருக்கம் என்று நம்மை மி ரள வைத்தார். இப்படி சினிமாவில் நடிகை, பாடகி, குரல் கொடுப்பவர் என்று பலவிதமாக ரவுண்டு வந்து கொண்டிருக்கும் ஆண்ட்ரியா சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார்.

hard-yoga andriya-jeremiah

இப்போது அதிலிருந்து குணமடைந்து மீண்டு வந்துள்ள ஆண்ட்ரியா கடினமான யோகாசனங்களை சர்வ சாதாரணமாக செய்து அசத்தி வருகிறார். யோகா செய்வதன் மூலம் கொரோனா உள்ளிட்ட பல நோய்களையும் விரட்டியடித்து உடலை ஆரோக்கியமாக பராமரிக்க முடியும் என்று அனைவருக்கும் உணர்த்தும் விதமாக தனது யோகாசன புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தியுள்ளார் ஆண்ட்ரியா.

hard-yoga andriya-jeremiah

தனது உடலை ரப்பர் போல வளைத்து யோகா செய்யும் ஆண்ட்ரியாவின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கொரோனாவை விரட்ட ஆண்ட்ரியாவின் யோகா முறைகளை நாமும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று கூறிவருகின்றனர்.