அனன்யா நாகல்லா என்ற பெயரை இதற்கு முன் நீங்க கேள்விப்பட்டதுண்டா? ஆந்திரா அல்லது தெலுங்கானாவில் வசிப்பவர்களுக்கு இந்த அம்மணியை பற்றி கொஞ்சம் தெரிந்திருக்கும். இவர் கடந்த இரண்டு வருடங்களில் நான்கு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதற்குள் இவர் தான் அடுத்த தமன்னா என்று இவரது ரசிகர்கள் இவரைப்பற்றி புகழ்ந்து தள்ளிக்கொண்டிருக்கின்றனர்.
மல்லேஷம் என்ற மலையாளப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான அனன்யா அதன் பிறகு பிளே பேக் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். இவரை பிரபலப்படுத்தியது என்னவோ பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படம் தான். அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் ரீமேக் என்று கூறப்படும் இந்த படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் கவனிக்கப்படும் நடிகையாக மாறியுள்ளார் அனன்யா.
இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்தால் விரைவில் தமிழ் சினிமாவிலும் எட்டிப்பார்க்க வாய்ப்பிருக்கிறது. அந்த அளவுக்கு விதவிதமான புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு அசத்தி வருகிறார் அனன்யா நாகல்லா. சமூக வலைத்தளங்களில் புதுமுக நடிகைகள் தங்களுடைய புகைப்படங்களை வெளியிட்டால் கூட இப்போது அது ட்ரெண்டாகி விடுகிறது.
அதனால் தான் படங்கள் மூலம் இன்னும் பெரிய இடத்துக்கு வரவில்லையென்றாலும் அனன்யாவின் புகைப்படங்கள் இணையத்தில் அடிக்கடி வைரலாகிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் இவர் சிவப்பு நிற டாப்ஸ் அணிந்தபடி சில புகைப்படங்களை பதிவேற்றியுள்ளார். அதைப்பார்த்த நெட்டிசன்கள் மற்றும் இவருடைய ரசிகர்கள் தாறுமாறாக வர்ணித்து வருகின்றனர். உணர்ச்சி மிகுதியில் என்ன சொல்கிறோம் என்பதை கூட யோசிக்காமல் சிலர் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
அனன்யா நாகல்லா பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க? இவர் விரைவில் தமிழ் சினிமாவுக்கு வருவாரா? தமிழ் படத்தில் இவர் யாருக்கு ஜோடியாக நடித்தால் பொருத்தமாக இருக்கும்? இந்த கேள்விகளுக்கு உங்களுடைய பதில்களை கமெண்ட் மூலம் சொல்லலாம்.