அமெரிக்காவில் மசசூசெட்ஸ் மாகாணத்தில் 55 வயது மதிக்கத்தக்க ரோரி வுட் என்னும் வயதான பெண்மணி வாழ்ந்துவந்துள்ளார். இந்த பெண்மணி வாழும் பகுதியில் தொடர்ந்து இடையூறுகள் விளைவிப்பதாக அந்த பகுதியை சேர்ந்த மக்கள் இவர் மீது காவல் துறையில் புகார் அளித்திருந்தனர்.

இந்த பெண்மணியை கைது செய்து விசாரிக்க காவல் துறையினர் இவர் குடியிருந்த பகுதிக்கு வந்துள்ளனர். இந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்று காவல் துறை எவ்வளவோ சொல்லியும் இந்த பெண்மணி கேட்கவில்லை. மாறாக தான் கொண்டுவந்த தேனீக்களை பறக்கவிட்டு காவலர்களையும், அந்த இடத்தில் வசித்த மக்களையும் தலை தெறிக்க ஓடவிட்டுள்ளார் இந்த ரோரி வுட்.

அதுமட்டுமல்லாமல் தேனீக்களிடம் இருந்து இவரை பாதுகாத்துக்கொள்ள Bee keeper suit அணிந்து தன்னை பாதுகாத்துக்கொண்டுள்ளார் இந்த பெண்மணி. பின்னர் போலீசார் இந்த பெண்மணியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
