notification 20
Highrise
அமெரிக்கர்கள் தங்கள் வாழ்க்கையை எப்படி வாழ்கிறார்கள்? இந்தியர்களின் பழக்கங்களில் இருந்து அமெரிக்கர்கள் எப்படி மாறுபடுகிறார்கள்?

நம்ம ஊரில் படிக்கும் பாதி இளைஞர்களின் ஆசை நல்லா படிச்சு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும். அதுக்கு நம்ம ஊரில் வேலை செய்தால் வாழ்க்கையில் செட்டில் ஆக முடியாது. அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கு சென்றால் மட்டுமே கை நிறைய சம்பாதிக்க முடியும். அமெரிக்க மக்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என்று அமெரிக்காவில் வாழும் நண்பர் ஒருவரிடம் கேட்டேன்.

அமெரிக்காவில் வாழும் மக்கள் தான் உண்டு, தங்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள். 80 வயதானவராக இருந்தாலும் எதாவது ஒரு வேலைக்கு செல்வார். தங்கள் பிள்ளைகளை நீங்கள் இந்த படிப்பிற்கு தான் படிக்க வேண்டும் என்று வ*ற்புறுத்த மாட்டார்கள். அவர்களின் விருப்பத்தின் பெயரில் அவர்களை சுதந்திரமாக விட்டுவிடுவார்கள்.

பிள்ளைங்களுக்கு என்று தனியாக எந்த பாக்கெட் மணியும் தரமாட்டார்கள். பிள்ளைகள் தங்கள் 16 வயதை அடைந்தவுடன் படித்துக்கொண்டே பகுதி நேர வேலைக்கு சென்று தங்கள் தேவைகளை பூர்த்தி செய்துகொள்வார்கள். எந்த கடைக்குள் சென்றாலும் புன்னகையுடன் நம்மை வரவேற்பார்கள். கடையை விட்டு வெளியே செல்லும்போது உங்கள் வருகைக்கு நன்றி என்று சொல்லி நம்மை அனுப்பி வைப்பார்கள்.

யாரிடமும் அடுத்தவர்களை பற்றி கு*றை பேச மாட்டார்கள். ஒருத்தங்க வீட்டுக்கு வருவதற்கு முன்னர் உங்க வீட்டுக்கு வரலாமா என்று நமது விருப்பம் கேட்ட பின்னரே வருவார்கள். மொத்தத்தில் அமெரிக்க மக்கள் யார் மீதும் பொ*றாமை படாமல் தான் உண்டு, தங்கள் வேலை உண்டு என்று இருப்பார்கள்.

Share This Story

Written by

Karthick View All Posts