தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் அமலாபால். மைனா படம் மூலமாக திரையுலக பயணத்தை தொடங்கிய இவர் தற்போது பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்து இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் பல OTT தொடர்களிலும் தனது திறமையான நடிப்பால் முத்திரை பதித்துள்ளார். என்றாலும் இவருக்கும் திருமண வாழ்க்கை சரிவர அமையவில்லை என்று தான் சொல்லவேண்டும். இருந்தாலும் அதனை எல்லாம் பொருட்படுத்தாமல் முழுக்கவனத்தையும் தனது திறமையான நடிப்பில் செலுத்தி வரும் அமலாபால் தற்போது கடாவர் என்ற வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து இருக்கிறார். வெகு விரைவில் இந்த தொடர் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அமலாபால் ஒரு சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் "ராஜு வூட்ல பார்ட்டி" என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமலாபால் தனது இளமைக்காலம் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ளார். அதாவது டீன் ஏஜ் பருவத்தில் காதலர் ஒருவர் இருந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் தியேட்டர்களில் செய்த வேலைகளையும் பகிர்ந்து கொண்டு இருக்கிறார் அமலாபால். தியேட்டருக்கு தனது காதலனுடன் சென்றால் கார்னர் சீட்டில் தான் அமருவர்களாம். மேலும் அந்த காதலனுக்கு முத்தம் கொடுத்துள்ளதாகவும் அமலாபால் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர் யார்? என்பது பற்றி எந்த தகவலும் அமலாபால் சொல்லவில்லை. எனவே அந்த காதலன் குறித்த சர்ச்சையான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஒரு வேலை தனது வெப்சீரிஸ்க்கு ப்ரோமோஷன் செய்யம் நோக்கில் அவர் இப்படி கூறி இருக்கலாம் என்றும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள்.