ajith-kumar-help-unknown-airport-co-passenger
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் நடிகர் அஜித். அண்மையில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் 200 கோடிக்கும் மேல் வசூலித்து வசூல் சாதனை புரிந்தது. நடிகர் அஜித் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் எனக்கு ரசிகர் மன்றமே வேண்டாம் என சொல்லி ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார். என்னை இனிமேல் யாரும் தல என்று அழைக்க வேண்டாம், அஜித் குமார் அல்லது AK என்று அழையுங்கள் என்றும் அறிவிப்பு வெளியிட்டார்.

ajith-kumar-help-unknown-airport-co-passenger
இருந்தும் ரசிகர்கள் அஜித்தை எங்கும் விட்டுக்கொடுக்காமல் இருக்கிறார்கள். அவரை திரையில் பார்ப்பதை கடவுளை பார்ப்பதற்கு சமமாக நினைக்கிறார்கள். இதுக்கெல்லாம் காரணம் அஜித்தின் குணம் தான். அவரிடம் உதவி என்று யார் சென்றாலும் வாரி வழங்கும் வள்ளல் தன்மை கொண்டவர் அஜித். சிலருக்கு கேட்காமலேயே உதவி தேவைப்பட்டால் தானாக முன்வந்து உதவும் மனப்பான்மை கொண்டவர் அஜித்.

ajith-kumar-help-unknown-airport-co-passenger
அண்மையில் அஜித் க்ளாஸ்க்கோவிலில் இருந்து சென்னைக்கு விமானத்தில் பயணித்துள்ளார். அப்போது ஒரு பெண்மணி தன்னுடைய 10 மாத கைக்குழந்தையை வச்சுக்கிட்டு ரொம்ப சிரமப்பட்டுள்ளார். அப்போது அஜித் தாமாக அந்த பெண்ணிடம் சென்று அந்த பெண்மணி மற்றும் குழந்தையின் கைப்பையை சுமந்து சென்றுள்ளார். இல்ல பரவால்ல சார், நீங்க எவ்வளவு பெரிய நடிகர், நானே என்னுடைய லக்ககேஜை எடுத்துக்குறேன் என்று அந்த பெண் சொல்லி இருக்கிறார்.

ajith-kumar-help-unknown-airport-co-passenger
இல்லம்மா, பரவால்ல, நானும் ரெண்டு குழந்தைக்கு தகப்பன் தான், உங்களுடைய சிரமம் எனக்கு புரியும் என்று சொல்லி அந்த பெண்மணிக்கு உதவியுள்ளார் அஜித். அஜித் அந்த பெண்மணிக்கு உதவிய புகைப்படங்களை அந்த பெண்ணின் கணவர் தற்போது இணையதளங்களில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த அஜித் ரசிகர்கள் அஜித்தின் இந்த செயலை பாராட்டி வருகின்றனர்.
