நடிகர் அஜித்தை பிடிக்காத ரசிகர்கள் யாருமே இருக்க மாட்டாங்க. திரையில் நடிப்பது மட்டும் தான் அவருடைய வேலை. மற்ற நேரங்களில் தன் குடும்பத்துடன் நேரம் செலவிடுவதை அதிகம் விரும்புவார். அரசியல் பிரமுகர்களையும், கட்சிகளையும் எப்போதும் விமர்சனம் செய்யமாட்டார். இவர் பல வருடங்களுக்கு முன்னர் ஜெயா தொலைக்காட்சியில் அளித்த பேட்டி ஒன்று தற்போது ரசிகர்களிடையே பிரபலமாகி வருகிறது.
அந்த பேட்டியில் அவரிடம் சந்தானம் கேள்வி கேட்கிறார். நீங்க அரசியலுக்கு வருவீங்களா? மாட்டிங்களா? என்று அஜித்தை பார்த்து சந்தானம் கேட்கிறார். அப்போது அஜித் சொல்லும் விஷயம் நம்ம எல்லோரையும் ஆச்சர்யப்பட வைக்கும் வகையில் உள்ளது. ரொம்ப நாட்களாக என்கிட்டே இந்த கேள்வி கேட்டுகிட்டே இருக்காங்க. நம்ம நாட்டில் நம்ம எல்லாரையும் வழிநடத்த ஒரு தலைமை தேவைப்படுகிறது.
அதில் எந்த சந்தேகமும், மாற்றுக்கருத்தும் இல்லை. அதுக்காக நம்ம எல்லோரும் அரசியலுக்கு வரவேண்டும் என்கிற அவசியம் இல்லை. நாட்டில் உள்ள மக்கள் எல்லோரும் தங்கள் கடமைகளை ஒழுங்காக செய்தால் நாடு நல்லா இருக்கும். இங்க இருக்குற எல்லோரும் IAS, IPS அதிகாரிங்க பண்றதெல்லாம் சரி இல்ல, நாட்டுல ஊழல் ரொம்ப அதிகம் ஆகிருச்சு, அரசு அதிகாரிங்க எல்லோரும் ஒழுங்கா வேலை செய்ய மாட்டேங்குறாங்க என்று குறை சொல்வார்கள்.
ஆனால் மக்கள் எல்லாரும் தங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு உண்மையா நடக்குறாங்களான்னு கேட்டா பதில் வராது. எல்லோரும் தங்கள் கடமையை ஒழுங்கா செஞ்சா நாடு நல்லா இருக்கும் என்று சொல்லி இருப்பார். இதைக் கேட்ட சந்தானமும் தல நீங்க சொல்றது சரிதான், யோசிச்சு பாக்க வேண்டிய விஷயம் தான் என்று சொல்லுவார். அஜித் அன்னைக்கே நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்றும், மக்கள் தங்கள் கடமையை ஒழுங்கா செஞ்சா அரசாங்கமும் நாடும் நல்லா இருக்கும் என்று சொல்லியிருக்கிறார் என்று அஜித் ரசிகர்கள் அந்த பேட்டியை தற்போது வைரல் செய்து வருகின்றனர்.