நீண்ட வருடங்களுக்கு முன் வெளியான காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் தற்போது மெயின் ஹீரோயினாக வளர்ந்துவிட்டார். தமிழ்ப்படம் 2 மற்றும் நான் சிரித்தால் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் இளசுகள் மத்தியில் பிரபலமானார். ஆனால் அதன் பிறகு பெரிதாக படவாய்ப்புகள் இல்லாமல் எப்போதும் இன்ஸ்டாகிராமிலேயே குடிகொண்டுள்ளார்.
அடிக்கடி இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வார். மிகவும் அழகான முகம் கொண்ட ஐஸ்வர்யா மேனனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இவர் வெளியிடும் புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவை உடனுக்குடன் ட்ரெண்டாவதற்கு இதுவும் ஒரு காரணம்.
இவர் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அழகான முக பாவனைகளை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இதைப்பார்த்த இவரது ரசிகர்கள் ஏடாகூடமாக வர்ணித்து வருகின்றனர். இந்த பயலுங்க எல்லாம் எதுக்காக இப்படி வர்ணிக்கிறாங்கன்னு தான் புரியல. இவ்வளவு அழகான முகத்தோற்றத்தை கொண்டிருந்தாலும் இன்னும் பெரிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது தான் ஆச்சர்யமாக உள்ளது.
டிக்கிலோனா படத்தில் வந்த பேர் வச்சாலும் பாடல் மூலம் அனகா ஒரே நாளில் ட்ரெண்டானதைப்போல இவருக்கும் ஒரு பாட்டு அமைந்துவிட்டால் போதும், இவரும் உச்சத்துக்கு சென்றுவிடுவார் என்று இவரது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட பிரபுதேவாவுடன் இணைந்து ஒரு விளம்பரப்படத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா மேனன். அவரைப்போன்ற நடிகர்களுடன் இணைந்து ஒரு படம் நடித்தால் கூட இவருடைய மார்க்கெட் எங்கோ சென்று விடும்.
இவருக்கு எப்போது அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்கும் என காலம் தான் பதில் கூற வேண்டும். இப்போதைக்கு அவரை இன்ஸ்டாகிராம் மூலமாக ரசிக்க வேண்டியது தான். ஐஸ்வர்யா மேனன் வெளியிட்டுள்ள வீடியோவை பார்த்துவிட்டு நீங்களும் உங்களுடைய கருத்துக்களை கூறலாம்.