மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த தி கிரேட் இந்தியன் கிச்சன் என்னும் படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் சம்மந்தமான விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் கடவுள் பற்றியும், கோவில்கள் பற்றியும் சர்ச்சை கருத்தை பதிவிட்டார்.

இந்த உலகில் உள்ள ஆணும், பெண்ணும் சமம். யார் எந்த கோவிலுக்குள் போகவேண்டும், போகக்கூடாது என்று சொல்ல மனிதர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. இவை எல்லாம் மனிதர்கள் உருவாக்கிய சட்ட திட்டங்கள். கடவுள் வந்து பெண்கள் இந்த கோவிலுக்குள் செல்லக்கூடாது. தீட்டாக இருக்கும் பெண்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று சொல்லவில்லை. மனிதர்களாகிய நாம் தான் இந்த சட்டதிட்டங்களை உருவாக்கி வைத்துள்ளோம் என்று சர்ச்சையான பேட்டி கொடுத்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
