இன்றைய நவீன காலத்தில் மக்களின் பெரும்பலான தேவைகள் இணையத்தை சார்ந்தே இருக்கிறது. அது மட்டுமல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அனைத்தும் தற்போது இணையத்தில் செய்யப்படுவதால் ஹேக்கர்களின் அபாயம் அதிகமாக போய்க்கொண்டு இருக்கிறது. இதனால் தகவல்களை திருடிவிடுவதோடு மட்டுமல்லாமல் முக்கியமான பரிவர்தனைகளையும் தடுத்து நிறுத்திவிடுகிறார்கள்

இந்த வரிசையில் நமது நாட்டின் முக்கிய மருத்துவ நிறுவனமான எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதள சேர்வர் திடீரென முடங்கியது. இதற்கான காரணம் குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் வெளியாகாத நிலையில் சில புரளிகள் கிளம்பியும் இருக்கிறது. அதாவது எய்ம்ஸ் நிறுவன வலைதளர் சர்வர் ரன்சம்வேர் தாக்குதலுக்குள்ளாகி இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது

அதாவது தகவல்களை பூட்டிவைத்துக்கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகை கொடுத்தால் தான் அதனை விடுவிக்க முடியும் என்று மிரட்டல் விடுத்தது பணம்பறிக்கும் வேலைதான் ரன்சம்வேர் எனப்படுகிறது. ஒருவேளை இந்த வகையான தாக்குதல்கள் ஏற்பட்டு இருந்தால் விரைவில் சரிசெய்யப்படவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்