விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக போகிறது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். இதற்கிடையில் நடிகை கீர்த்தி சுரேஷ் விஜயை காதலிப்பதாக வதந்தி பரவியது. இந்த விவகாரம் அறிந்த மனைவி சங்கீதா லண்டன் சென்றுவிட்டதாக சோஷியல் மீடியாவில் கிளப்பிவிட்டாங்க.
இதற்கு விஜய் ரசிகர்கள் காரசாரமான பதிலடி கொடுத்து வருகின்றனர். ஒருவழியா கீர்த்தி சுரேஷ் மேட்டர் முடிவுக்கு வந்தாச்சு. தளபதி 67 படத்தில் விஜயுடன் யார் ஜோடி சேரப்போறாங்க என்ற அறிவிப்பை வெளியிட்டு, சர்ச்சைக்கு ஓய்வு கொடுத்துள்ளது படக்குழு. நடிகை திரிஷா இணைந்திருப்பதை பட குழுவினர் உறுதி செய்துள்ளனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன் விஜய், திரிஷா இணைந்து கில்லி, திருப்பாச்சி,ஆதி, குருவி என ஹிட் படங்களாக கொடுத்திருந்தனர். இப்போது 14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜயுடன் திரிஷா நடிக்க உள்ளார். எனக்குப் பிடித்த திறமையான குழுவில் நானும் ஒரு பகுதியாக இணைய வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி, இனி வரும் காலங்கள் உற்சாகமானது என திரிஷா மகிழ்ச்சி பொங்க பேசினார்.