notification 20
Misc
ஆப்கானிஸ்தான் நாட்டில் ரயில்வே சேவை இல்லாததுக்கு காரணம் பாதுகாப்பு இல்லாத காரணத்தாலா? இல்லை மலைப்பிரதேசம் என்பதாலா?

இந்த செய்தி நிச்சயம் உங்களை ஆச்சர்யப்பட வைக்கும். இந்த உலகம் தொழில்நுட்ப அளவில் பல மடங்கு முன்னேறி வருகிறது. ஆனால் இன்னமும் ஆப்கானிஸ்தான் நாட்டில் ரயில்வே சேவைகள் அமல்படுத்தப்படவில்லை. இது ஏன் என்றால் சிலர் அந்த நாடு முழுவதும் நிறைய மலைப் பிரதேசங்களால் சூழப்பட்டுள்ளது. எனவே அங்கே ரயில்வே சேவை நடைமுறைப்படுத்துவது சிக்கலானது என்று பதில் சொல்வார்கள்.

ஆனால் உண்மை அதுவல்ல. அந்த நாட்டில் பாதுகாப்பு என்பது கடுகளவும் கிடையாது. அதனால் தான் அந்த நாட்டில் ரயில்வே சேவை நடைமுறைப்படுத்தவில்லை என்பது தான் உண்மை. 1970களில் அந்த நாட்டில் நிறைய போ*ராளிகளும், தீ*விரவாதமும் ஊடுருவி இருந்ததால் அப்போது அந்த நாட்டை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சோவியத் ரஷியா ரயில்வே சேவைகளை நடைமுறைப்படுத்தவில்லை.

அதுக்கு அப்புறம் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அவர்கள் நினைத்திருந்தால் நிச்சயம் ரயில்வே சேவைகளை கொண்டுவந்திருக்க முடியும். அவர்களும் இந்த நாட்டு மக்களுக்கு எதுக்கு இந்த சேவை என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள். தற்போது தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

எந்த முன்னணி நாடும் இப்போது ஆப்கானிஸ்தானில் இல்லை. இனி தாலிபான்கள் சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் உதவியை நாடினால் அந்த நாட்டில் மிக விரைவில் ரயில்வே சேவைகள் கொண்டுவர முடியும். யோசிச்சு பாருங்க, நம்ம எல்லாம் சாதா ரயில், மெட்ரோ ரயில், புல்லட் ரயில் என்று பறந்து கொண்டிருக்கிறோம். ஆனால் இன்னமும் ஆப்கான் மக்கள் ரயிலையே பார்த்ததில்லை என்று நினைக்கும்போது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

Share This Story

Written by

Karthick View All Posts