Daily News

என் மருமகள் 8 பேரை வீட்டு வேலைக்கு வைத்திருக்கிறாள்: 4 லட்சம் ரூபாய் வரை ரெடி - நடிகை நயன்தாரா மாமியார் சொல்லும் ரகசியம்!

Nov 24 2022 02:14:00 PM

இயக்குனர் விக்னேஷ் சிவனின் தாய் மீனாகுமாரி. போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். சென்னையில் நடந்த ஒருவிழாவில் பேசிய அவர், மருமகள் நயன்தாரா பற்றிய சில உண்மைகளை கூறி இருக்கிறார். சீரியல் மாமியார்-மருமகளைப் போல இல்லாமல், நயன்தாராவை ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளினார். வீட்டு வேலை செய்யும் பெண்கள் முதற்கொண்டு நயன்தாரா மேல் பாசமாக இருப்பாங்களாம்.

Actress Nayanthara mother in law Chennai

அவங்க காட்டும் பாசத்து மேல் டபுள் மடங்கு நயன்தாரா பாசம் காட்டுவாராம். என்னுடைய மருமகள் வீட்டில் 8 பெண்கள் வீட்டு வேலைக்கு இருக்காங்க. எல்லோரையும் குடும்பம் மாதிரி நடத்துவார் என்கிறார் மீனாகுமாரி. ஒருமுறை வீட்டு வேலை செய்யும் பெண் சோகமாக உட்கார்ந்து இருந்தாராம். பிஸியான வேலைக்கு இடையிலும் அந்த பெண்ணை அழைத்து என்ன நடந்துச்சுன்னு கேட்டு இருக்காங்க. 

Actress Nayanthara mother in law Chennai

தனக்கு 4 லட்சம் ரூபாய் கடனாகி சிரமப்படுவதாக வீட்டு வேலை செய்யும் பெண் கூறியிருக்கிறார். உடனே பணம் கொடுத்து அவருடைய கடனை நயன்தாராவே அடைத்துவிட்டாராம். எங்கும் நேர்மையாக இருந்தால் எல்லாமே கிடைக்கும். என்னுடைய மருமகளும் அப்படித்தான். என்னுடைய மகனுக்கு ஏற்ற பெண் நயன்தாரா தான் என மீனாகுமாரி மகிழ்ச்சியுடன் கூறினார்.