வாழ்ந்த யோகி பாபு மாதிரி வாழணும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கிறாங்க. எந்த டைரக்டர் தன்னை அணுகினாலும், படத்துக்கு இவ்வளோ தாங்க, அவ்வளோ தாங்கன்னு கேட்பதில்லை. என்னுடைய ஒரு நாள் சம்பளம் இவ்வளோ தான். அதை மட்டும் கொடுக்க நீங்க ரெடின்னா, எவ்வளோ நாள் வேண்டுமானலும் யூஸ் பண்ணிக்கோங்கன்னு சொல்லிவிடுகிறார்.
இந்த திட்டம் நல்லா வொர்க் அவுட் ஆகும் போலிருக்கு. கோடிகளில் வருமானம் குவிந்து கொண்டே இருக்கிறதாம். இடையில் வித்தியாசமான கதைகளில் ஹீரோ வாய்ப்பும் வருவதால், வீட்டிலேயே ஜிம் செட்-அப் எல்லாம் போட்டு பயங்கர வொர்க்-அவுட் பண்ணிக்கிட்டு இருக்கார். யாரெல்லாம் இவருடைய முடியை பார்த்து கிண்டல் பண்ணாங்களோ, அவங்க முன்னாடி கெத்தா வாழ்ந்து காட்டுறாரு மனுஷன்.
நீ எல்லாம் உன் மூஞ்சியை கண்ணாடியில் பார்த்து இருக்கியான்னு கேவலமா பேசி இருக்காங்க. அந்த அவமானத்தை எல்லாம் தாண்டி, அப்படி கேட்டவங்க மூஞ்சியில் கரியை பூசியிருக்கிறார். ஒரு நாளைக்கு 10 லட்சம் ரூபாய் எடுத்து வைக்கலைன்னா, தூக்கம் வருவதில்லையாம். எப்படியும் கொடுக்கல் வாங்கல் மூலமாகவும், தினசரி சம்பளம் மூலமாகவும் 10 லட்சம் ரூபாய் வருமானம் வந்து விடுகிறது.
கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார். அவருடைய 10 நாள் வருமானத்தை எடுத்து வைத்தாலே 1 கோடியை தாண்டும். எல்லோரும் சீப்பா பார்த்த என்னாலயே சாதிக்க முடியும் போது, உங்க எல்லாருக்கும் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும். அதனை சரியா யூஸ் பண்ணுங்க. சாதிக்கலாம் என அசத்தலான அட்வைஸ் சொல்லி சுற்றி இருப்பவர்களையும் வளர வைத்துக்கொண்டிருக்கிறார். ஹேட்ஸ் ஆப் யோகி பாபு!