ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான சித்தார்த் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி என்று பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். சமூக வலைதளங்களில் அடிக்கடி தைரியமாக பல கருத்துக்களை கூறுவார். அதனால் பலமுறை ச ர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். எந்த பிரச்சனை வந்தாலும் இவர் ப யப்படாமல் தன்னுடைய கருத்து சுதந்திரத்தை பயன்படுத்தி வருவது ஒரு விதத்தில் பாராட்டியாக வேண்டிய விஷயம் தான்.
சித்தார்த் ஒரு திறமையான நடிகர் என்பது நம் எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். ஆனால் அவர் ஒரு சிறந்த பாடகர் என்பது நம்மில் பலரும் அறிந்திராத தகவல் ஆகும். இன்றைய பதிவில் சித்தார்த் குரலில் வெளியாகியுள்ள சில திரைப்பட பாடல்களை காணலாம் வாங்க.
1. அடடா அடடா
சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடல் உங்கள் பலருக்கும் மிகவும் பிடித்த பாடலாக இருக்கும். அப்படியே ஜெயம் ரவியே பாடியது போல இருக்கும் இந்தப்பாடலை பாடியவர் நம்முடைய சித்தார்த் தான் என்பது கொஞ்சம் வியப்பாக உள்ளதா?
2. பார்வதி பார்வதி
சித்தார்த் மற்றும் அமலா பால் இருவரும் நடித்த காதலில் சொதப்புவது எப்படி திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பார்வதி பார்வதி பாடலும், ஆனந்த ஜலதோஷம் என்ற பாடலும் சித்தார்த் பாடியவை தான்.
3. பிரபலமாகவே
இந்தப்பாடல் எந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளது என்று யோசிக்க வைக்கிறதா? எனக்குள் ஒருவன் படத்தில் இடம்பெற்றுள்ளது இந்தப்பாடல். பாடல் பெயர் பிரபலமாகவே என்று இருந்தாலும் இந்தப்பாடல் பிரபலம் அடையாதது சற்று ஆச்சர்யம் தான்.
4. ஸ்ட்ராபெரி
ஸ்ட்ராபெரி படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலையும் சித்தார்த் தான் பாடியிருக்கிறார். இந்தப்படம் பெரிய அளவில் வெற்றிபெற தவறியதால் பாடலும் பெரிதாக வெற்றியடையவில்லை.
5. Shoot The Kili
இப்படி ஒரு பாட்டு கேட்ட மாதிரி நினைவு இருக்கிறதா? சித்தார்த் தானே எழுதிப்பாடிய இந்தப்பாடல் ஜில் ஜங் ஜக் படத்தில் இடம்பெற்றுள்ளது.
6. உன் பதில் வேண்டி
தரமணி என்ற தரமான படத்தில் இடம்பெற்ற இந்தப்பாடலின் குரல் நம் சித்தார்த்துடையது தான். இது அவர் தமிழ் மொழியில் பாடிய ஒரு சில பாடல்களின் தொகுப்பாகும். இது தவிர அவர் தான் நடித்துள்ள தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கூட சில பாடல்களை பாடியுள்ளார். பன்முகத்திறமை கொண்ட நடிகரான சித்தார்த்தின் பாடல்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த பாடல் எதுவென்பதை கமெண்டில் தெரிவிக்கவும்.