notification 20
Daily News
அன்னைக்கு ஷங்கர் சொன்னப்பவே நடிச்சிருந்தா இன்னைக்கு பாத் ரூம் கழுவுற நிலைமை உங்களுக்கு வந்துருக்காது?

appas-reject-kathalan-movie

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வளம் வருபவர் ஷங்கர். தான் இயக்கும் எல்லா படங்களிலும் மக்களுக்கு எதாவது ஒரு நல்ல கருத்தை பிரம்மாண்டமாக சொல்லி எல்லோரின் ஆதரவையும் பெற்றுவிடுவார் ஷங்கர். தற்போது ஒரே நேரத்தில் உலகநாயகன் கமலஹாசனை வைத்து இந்தியன் 2 என்னும் தமிழ் படமும் மற்றும் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து RC 15 என்னும் பான் இந்தியா படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர்.

appas-reject-kathalan-movie

எப்படியாவது ஷங்கர் மாதிரியான ஒரு முன்னணி இயக்குனரின் படத்தில் நடித்து விடமாட்டோமா என்று பல நடிகர்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஷங்கர் சினிமாவுக்கு படம் இயக்க வந்த புதிதில் முதன் முதலில் இயக்கிய படம் தான் காதலன். 1994ஆம் ஆண்டு பிரபுதேவா, நக்மா, வடிவேலு நடிப்பில் காதலன் படம் வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.

appas-reject-kathalan-movie

முதலில் இந்த படத்தில் பிரபுதேவாவை நடிக்க வைக்கும் எண்ணம் ஷங்கருக்கு இல்லை. அந்த காலகட்டத்தில் முன்னணி கதாநாயகனாக வளம் வந்த அப்பாஸை தான் ஷங்கர் அணுகி இருக்கிறார். இந்த கதை எல்லாம் எனக்கு செட் ஆகாது, என் ரேஞ்ச் என்ன தெரியுமா என்று பில்ட் அப் கொடுத்துள்ளார் அப்பாஸ். இப்போ நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் ஹார்ப்பிக் போன்ற பாத்ரூம் கழுவும் விளம்பரப்படங்களில் நடித்து வருகிறார் அப்பாஸ்.

Share This Story

Written by

Karthick View All Posts