நடிகர் நெப்போலியன் 80, 90களில் பிரபலமான நடிகர். சமீபத்தில் அமெரிக்கா சென்று அங்கு ஐடி நிறுவனத்தை தொடங்கினார். சமீபத்தில், இர்பான் என்ற யூடியூபர் நெப்போலியனின் வீட்டை வீடியோவாக படம் பிடித்தார். ஊனமுற்ற மகனுக்காக நெப்போலியன் வீட்டில் நிறைய மாற்றங்களைச் செய்ததைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். அந்த வீடியோ பெரிய அளவில் வைரலானது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நெப்போலியனிடம் வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவீர்களா என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் இப்படி பதில் அளிப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. தொடர்ந்து பேசிய நெப்போலியன், போக்கிரி படத்தின் போது நானும் விஜய்யும் பேசிக் கொள்ளவில்லை, அவருடைய படங்களை பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். ஆனால், எப்போது வேண்டுமானாலும் அவருடன் பேசவும், பணியாற்றவும் தயாராக இருக்கிறேன்.
ஆனால் அவர் பெற்ற அம்மா, அப்பாவிடமே பேசுவது இல்லையாம். இன்றைக்கு ஊர் முழுக்க இந்த விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. ஆனால் இந்த செய்தி அமெரிக்காவிற்கு வந்துள்ளது. முதலில் விஜய் அம்மா அப்பாவுடன் சமரசம் செய்ய வேண்டும். பிறகு, என்ன நடக்கிறது என்று பார்ப்போம். விஜய் கிட்ட பேச நான் ரெடி என கொளுத்திப் போட்டிருக்கிறார்.